தள்ளிப்போன கவுண்டம்பாளையம் ரிலீஸ்: “தமிழ்நாடு முழுக்க எதிர்ப்பு... வேதனையா இருக்கு” - நடிகர் ரஞ்சித்

“நான் பிறந்த மண்ணில் நான் எடுத்த படம் வெளியாகாதது வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வேதனை அளிக்கிறது” - நடிகர் ரஞ்சித் பேட்டி
நடிகர் ரஞ்சித்
நடிகர் ரஞ்சித்pt web
Published on

திரையரங்க உரிமையாளர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் அச்சுறுத்தல் விடுத்ததால் கவுண்டம்பாளையம் திரைப்படம் ஜூலை 5-ல் வெளியாகாது என நடிகர் ரஞ்சித் நேற்று தெரிவித்திருந்தார்.

நடிகர் ரஞ்சித்
நடிகர் ரஞ்சித்

இதுதொடர்பாக (படத்திற்கான எதிர்ப்பு மற்றும் மிரட்டல் தொடர்பாக) கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜூலை 5-ல் திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் ஒத்திவைக்கப்படுகிறது. இது தொடர்பாக முதல்வரையும் செய்தித்துறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன்.

இந்த படம் வெளியிட கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருக்கின்றனர். இதை தியேட்டர் உரிமையாளர்கள் சொல்லும் போது வருத்தமாக இருக்கிறது. நாடக காதலை பற்றியும், பெற்றோர்களின் வலியையும் படமாக எடுத்துள்ளேன். இதற்கு பல இடங்களிலிருந்து எதிர்ப்பு வருகிறது.

நடிகர் ரஞ்சித்
காஞ்சிபுரம் திமுக மேயரும் பதவி விலகுகிறாரா? கோவை நெல்லையைத் தொடர்ந்து புதிய சிக்கல்... நடந்தது என்ன?

ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும். என் வாயில் வந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. நான் அரசியல்வாதி கிடையாது. இந்த படத்தின் வெற்றிதான் என்னை எதிர்பவர்களுக்கு நான் சொல்லும் பதில்.

சென்சார் சான்றிதழ் வாங்கியும் இந்த படத்தை என்னால் வெளியிட முடியவில்லை. ஆனால், யார் எதிர்க்கிறார்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசின் அனுமதி பெற்று இந்த படத்தை விரைவில் வெளியிடுவேன். இனி நான் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவையும் கடவுள் பார்த்துகொள்வார். நான் நேர்மையாகவும், உண்மையாகவும் படம் எடுத்துள்ளேன், நான் பொய் சொல்லவில்லை.

நடிகர் ரஞ்சித் - கவுண்டம்பாளையம்
நடிகர் ரஞ்சித் - கவுண்டம்பாளையம்

இந்த படத்தை திரையிட்டால் கலாட்டா செய்வோம் என்று பலர் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுகின்றனர். திரையரங்கின் பாதுகாப்பு மிக முக்கியம். ஒரு நாடக காதலை பற்றியும், ஒரு நல்ல குடும்ப கதையையும் நான் எடுத்துள்ளேன். ஆனால், மிரட்டி என்னை போன்ற எளிய கலைஞனை வளரவிடாமல் தடுக்கிறார்கள்” என தெரிவித்தார்.

முன்னதாக இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பொன்றில், “சமூகநீதி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும். சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும்” என்று ரஞ்சித் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஞ்சித்
“சுயமரியாதை திருமணங்களை நிறுத்தவேண்டும்; சமூகநீதி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும்”- நடிகர் ரஞ்சித்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com