தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 'நட்சத்திர கலை விழா' ஜனவரி 6 ம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா ஜனவரி 6-ம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலை நிகழ்ச்சி, நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
இது தவிர ஆறு அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டிக்கு சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவா ஆகியோர் தலைமை தாங்குவார்கள். ரஜினி, கமல் உட்பட 100க்கும் மேற்பட்ட நடிகர் , நடிகைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிகழ்வில் மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டியும் நடைபெறவுள்ளது. இதில் மலேசிய நடிகர்கள், தமிழ் நட்சத்திரங்களுடன் மோதவுள்ளனர். இந்நிகழ்ச்சி மலேசிய அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளது.
சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இவ் விழா பற்றி அறிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் சங்க நிர்வாகிகள் கார்த்தி, கருணாஸ், பூச்சி முருகன், மனோபாலா, குட்டி பத்மினி, ரோகிணி, பசுபதி, ரமணா, நந்தா, உதயா ஆகியோர் இதை அறிவித்தனர். இந்த விழா மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கின் தலைமையில் நடைபெறவுள்ளது.