இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் பயோ படமான பிக் ‘சபாஷ் மிது’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 7000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை, மகளிர் கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை கடந்த இந்திய வீராங்கனை, சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீராங்கனை போன்ற பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். ஏற்கனவே, மேரி கோம், தோனி உள்ளிட்ட விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் எடுக்கப்பட்டு வெற்றியும் கண்ட நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய பெண்களுக்கு முன்மாதிரியாய் திகழும் மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதாக அறிவிப்பு வெளியானது.
ராகுல் தொலாகியா இயக்க வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மித்தாலி தோற்றத்தில் நடிகை டாப்சி நடிக்கிறார். ‘தனது வாழ்நாளில் கிரிக்கெட் விளையாடியதே இல்லை. மித்தாலி ராஜ் தோற்றத்தில் நடிப்பது பெரும் சவாலாது’ என்று கூறிய டாப்ஸி கடுமையாக பயிற்சிகள் செய்து வந்தார். ஆர்வமுடன் கிரிக்கெட்டையும் கற்றுக்கொண்டார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் பேட்டுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து முதல்நாள் ஷூட்டிங் என்று நடிகை டாப்ஸி உற்சாகமுடன் பகிர்ந்திருக்கிறார்.