“ஜாமியா மாணவர்களின் வீடியோ பார்த்தபோது வருந்தினேன்” - டாப்சி பேட்டி

“ஜாமியா மாணவர்களின் வீடியோ பார்த்தபோது வருந்தினேன்” - டாப்சி பேட்டி
“ஜாமியா மாணவர்களின் வீடியோ பார்த்தபோது வருந்தினேன்” - டாப்சி பேட்டி
Published on

சிஏஏ ஆதரவாளர்கள் தனது படத்தைப் பற்றிப் பரப்பும் செய்தி குறித்து நடிகை டாப்சி பேட்டி அளித்துள்ளார்.


பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் நடிகை டாப்சி நடித்துள்ள திரைப்படம் ‘தப்பட்’ இன்று வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்தைப் புறக்கணிக்கக் கோரி சமூக ஊடகங்களில் பலர் கருத்து கூறி வருகின்றனர். இதற்கு பாலிவுட் நடிகர் டாப்ஸி பதிலளித்துள்ளார். இந்தப் படம் உள்நாட்டு வன்முறை பற்றியது என்றும் சிஏஏ-க்கு எதிர்பவர்களுக்கு ஆதரவானது என்றும் கூறி பலர் ட்விட்டரில் செய்தி பரப்பி வருகின்றனர். அவர்கள் அனைவரும் சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடும்படியாக உள்ளது.

இந்நிலையில் நடிகை டாப்சி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வுக்கு அளித்துள்ள ஒரு நேர்காணலில், “நடிகர்களின் தனிப்பட்ட கருத்துகள் அவர்களின் தொழிலைப் பாதிக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். அது இந்த அளவிற்கு நீளும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆக சுமார் 1000 அல்லது 2000 ட்வீட் வரை போட வேண்டும்.

உண்மையில் அது ஒரு படத்தைப் பாதிப்பதாக நான் நினைக்கவில்லை. நிறையப் பேருக்கு மாறாக நான் வித்தியாசமான சமூக மற்றும் அரசியல் கருத்துகளைக் கொண்டிருக்கலாம். அதற்காக மக்கள் சென்று படத்தைப் பார்க்க மாட்டார்கள் என்று அர்த்தமாகாது. ஒரு நடிகர் ஒருபோதும் ஒரு படத்தை விடப் பெரியவர் அல்ல. ஒரு படத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு நடிகரின் சமூக மற்றும் அரசியல் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை நீங்கள் பார்க்கலாமா? வேண்டாமா? என முடிவெடுப்பது முட்டாள்தனமானது” என்று கூறியுள்ளார்.

மேலும் தனது நிலைப்பாட்டைப் பற்றிப் பேசிய டாப்சி,“நான் சிஏஏ பற்றிய எனது கருத்துகளை வெளிப்படுத்தவில்லை. ஏனெனில் நான் அதைப் பற்றி ஆய்வு செய்யவில்லை. ஆனால் ஜாமியா மாணவர்கள் குறித்து வெளியான வீடியோ காட்சிகளை நான் பார்த்த போது அவை முறையானதாக உணர முடியவில்லை. மாணவர்கள் தங்கள் அவல நிலைமையைப் பற்றிப் பேசும் வீடியோக்களைப் பார்த்தபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஏதோ பெரிய விஷயம் நடந்ததாக நான் நினைக்கிறேன் அல்லது பெரியது ஒன்று நடக்கப்போகிறது” என்று கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் நடிகை டாப்சி மும்பையில் நடந்த சிசிஏவுக்கான போராட்டத்தின்போது அங்கே சென்று ஆதரவாக நின்றார். இது ஜேஎன்யூ மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பதாக இருந்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com