“என்னால் மட்டும் முடிந்திருந்தால்....” சுஷாந்த்தின் சகோதரி எழுதிய உருக்கமான கடிதம்

“என்னால் மட்டும் முடிந்திருந்தால்....” சுஷாந்த்தின் சகோதரி எழுதிய உருக்கமான கடிதம்
“என்னால் மட்டும் முடிந்திருந்தால்....” சுஷாந்த்தின் சகோதரி எழுதிய உருக்கமான கடிதம்
Published on

சுஷாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது சகோதரி ஸ்வேதா உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார். 

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், அவர் தூக்கிட்டே தற்கொலை செய்துகொண்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

அமெரிக்காவில் இருந்த அவரது சகோதரி ஸ்வேதா சிங் கிருதியால் ராஜ்புத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் அவர் தற்போது இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், ஸ்வேதா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சுஷாந்திற்கு உணர்ச்சிபூர்வமான எழுத்துகள் மூலம் அஞ்சலியை செலுத்தியுள்ளார். அதில், “ராஜ்புத் இனி எங்களுடன் உடல் ரீதியாக நீ இல்லை. அது சரி. நீ வேதனையில் இருந்ததை நான் நன்றாக அறிவேன். நீ ஒரு போராளி என்று எனக்குத் தெரியும். மன்னித்துவிடு ராஜ்புத்.. எல்லா வலிகளுக்கும் மன்னிக்கவும்... என்னால் முடிந்திருந்தால் உன்னுடைய அனைத்து வலிகளையும் எடுத்துக்கொண்டு என்னுடைய அனைத்து மகிழ்ச்சியையும் கொடுத்திருப்பேன். 

உன்னுடைய புன்னகை உன்னுடைய இதயத்தின் தூய்மையை பிரதிபலிக்கும். நீ எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இரு. எல்லோரும் உன்னை நேசித்தார்கள். நேசிக்கிறார்கள். நேசிப்பார்கள் என்பதை அறிந்து கொள். 

என் அன்பானவர்கள் அனைவருக்கும்... இது ஒரு கடினமான காலகட்டம். வெறுப்பை விட்டு அன்பைத் தேர்ந்தெடுங்கள். கோபத்தையும் வெறுப்பையும் விட்டுவிட்டு கருணை, இரக்கத்தை தேர்ந்தெடுங்கள். சுயநலத்தை விட்டுவிட்டு சுயநலம் இல்லாத மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களை மன்னியுங்கள். மற்றவர்களையும் மன்னியுங்கள். எல்லோரையும் மன்னியுங்கள். நீங்கள் உங்கள் மீதும் மற்றவர்கள் மீதும் கருணையுடன் இருங்கள். எந்த நிலையிலும் எதற்காகவும் உங்கள் இதயத்தை மூடி வைக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com