தமிழக அரசின் திரைப்பட விருதுகளில் தன்னுடைய படங்கள் எதுவும் தேர்வு செய்யப்படாதது குறித்து இயக்குனர் சுசீந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து இயக்குனர் சுசீந்திரன் தனது வருத்தத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில் "நீண்ட வருடங்களாக அறிவிக்கப்படாமல் இருந்த தமிழக அரசின் திரைப்பட விருதுகளை அறிவித்த முதலமைச்சர் பழனிசாமிக்கு மனமார்ந்த நன்றிகள். என்னுடைய படங்கள் எந்த விருதுக்கும் தேர்வு செய்யப்படாததற்கு உள்ளபடியே தேர்வுக் குழுவினருக்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய விருதையே பெற்றுத் தந்த அழகர்சாமியின் குதிரை , பலராலும் அதிகம் பேசப்பட்ட நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களை அரசு தேர்வு செய்யாதது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விருது வென்ற அனைத்து கலையுலக நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.