ஆஸ்கருக்கான தகுதி பட்டியலில் மொத்தமுள்ள 366 படங்களில் சூரரைப்போற்று படமும் இடம்பெற்றுள்ளது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ ஓடிடியில் நேரடியாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதனைத்தொடர்ந்து ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலுக்கும் படம் தேர்வானது.
கொரோனா காரணமாக, ஆன்லைன் ஸ்கிரீன் ரூமில் நடைபெறவுள்ள இந்த திரையிடலை உலகம் முழுக்க உள்ள நூற்றுக்கணக்கான ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் பார்வையிடுவார்கள். அதற்காக பொதுப்பிரிவில் தரமான 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இதில் திரையிடப்படும். அந்தப் பிரிவில் சூரரைப் போற்று திரைப்படம் தேர்வானதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் தற்போது, சூரரைபோற்று திரைப்படம் ஆஸ்கார் குழு தேர்வு செய்துள்ள ஆஸ்கருக்கு தகுதி வாய்ந்த சிறந்த படங்களின் பட்டியலில் நுழைந்துள்ளது. இந்தப் பட்டியலில் மொத்தம் 366 படங்கள் தேர்வாகியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே படமாக சூரரைப் போற்று திரைப்படம் அமைந்துள்ளது. சிறந்த நடிகருக்கு சூர்யா, ஆஸ்கர் விருதுக்கு வாக்களிக்க வருகிற 5 ஆம் தேதிலியிருந்து 10 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து இறுதி அறிவிப்பு மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/Oscars?src=hash&ref_src=twsrc%5Etfw">#Oscars</a> news: 366 feature films in contention for Best Picture <a href="https://t.co/Op3816kIYh">https://t.co/Op3816kIYh</a></p>— The Academy (@TheAcademy) <a href="https://twitter.com/TheAcademy/status/1365029043662319617?ref_src=twsrc%5Etfw">February 25, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
(Now, it has been learnt that Soorarai Pottru has emerged as the one and only Indian film amongst the 366 films - eligible for a Best Picture nomination at this year's Oscars! With the list finalized, Academy voting will start from March 5th to 10th, with nominations to be announced on March 15. Stay tuned!)
இந்த திரையிடலில் இருந்தே சிறந்தப் படம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு 6 முதல் 8 படங்கள் வரை இறுதி பரிந்துரைக்கு தேர்வு செய்யப்படும். அவற்றில் இருந்து சிறந்ததாக தேர்வு செய்யப்படும் படத்திற்கும், கலைஞர்களுக்குமே ஆஸ்கர் விருது வழங்கப்படும்.
கொரோனா காரணமாக இந்தாண்டு தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்கர் விருது விழா, ஏப்ரல் மாதம் 25-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.