விவசாயிகளை கவுரவப்படுத்திய 'கடைக்குட்டி சிங்கம்' குழு

விவசாயிகளை கவுரவப்படுத்திய 'கடைக்குட்டி சிங்கம்' குழு
விவசாயிகளை கவுரவப்படுத்திய 'கடைக்குட்டி சிங்கம்' குழு
Published on

விவசாயத்தினை மேம்படுத்தும் நோக்கில் கடைக்குட்டி சிங்கம் படக்குழு சார்பில் ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது. 

சூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். இந்தப் படத்திற்கு பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளதை தொடர்ந்து சென்னையில் படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. படம் விவசாயத்தை பெருமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டதால், வெற்றிவிழாவில் சாதனைப்படைத்த நெல் ஜெயராமன் உள்ளிட்ட 5 விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர். அதோடு, அவர்களின் பணிகளைப் பெருமைப்படுத்தும் வகையில், தலா 2 லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. 

தொடர்ந்து, விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் 1 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது. கடைக்குட்டி சிங்கம் வெற்றிவிழாவில், நடிகர்கள் கார்த்தி, சத்யராஜ், இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்ட அனைத்துப் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com