“ரஜினியின் 'பாபா'வில் ரகுவரன் நடிக்க வேண்டியது” - சுரேஷ் கிருஷ்ணா

“ரஜினியின் 'பாபா'வில் ரகுவரன் நடிக்க வேண்டியது” - சுரேஷ் கிருஷ்ணா
“ரஜினியின் 'பாபா'வில் ரகுவரன் நடிக்க வேண்டியது” - சுரேஷ் கிருஷ்ணா
Published on

‘பாட்ஷா’என்றேலே ரஜினிக்கு இணையாக நினைவுக்கு வருபவர் ரகுவரன். வில்லன் என்றாலே அவரின் உடல்வாகு, உடையலங்காரம் எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற வரைமுறையை மாற்றியவர் ரகுவரன். மெலிந்த உடல், கோட் சூட் என திரையில் வந்தாலும் தன் குரலால், கண்களால், நடிப்பால் வில்லத்தனத்தை மக்கள் மனதில் பதிய வைத்த மாடர்ன் வில்லன் இவர். அவரின் பிறந்தநாளான இன்று அவரின் பிறந்தநாள். ஆகவே ‘பாட்ஷா’இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இந்து நாளிதழில் பேசியுள்ளார்.

அதில ‘பாட்ஷா’ படம் உறுதி செய்யப்பட்ட போது  நாயகனின் வலிமைக்கு வில்லனும் சரிசமமாக இருக்க வேண்டும் என்று நினைத்ததாகவும், அதற்கு பின் பல தேடுதலுக்கு பின்னேதான் ரகுவரன் பெயரை தேர்வு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். ரகுவரன் தேர்வு குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ள அவர், ரகுவரனிடம் ஒரு தனித்துவம் உண்டு. உயரமானவர். ஆழமான குரலைக் கொண்டவர். அவரது பெயரை யாரோ ஒருவர் உத்தேசித்த போது நானும் ரஜினியும் உடனடியாக ஒப்புக்கொண்டோம். பின் கதை சொல்ல, ரகுவரனை அவரது இல்லத்தில் சந்தித்தேன். கண் இமைக்காமல் நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, ரகுவரன், தனக்கே உண்டான பாணியில், 'ஆண்டனி.... மார்க் ஆண்டனி' என்றார்.  அந்த உற்சாகத்துக்குப் பிறகு அவரது கை குலுக்கி கட்டி அணைத்தேன். அப்படித்தான் எனது ஆண்டனி உருவாகினான் என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி மற்றும் ரகுவரனின் நட்பு குறித்து பதிவிட்டுள்ள சுரேஷ் கிருஷ்ணா, ரகுவரனின் தோற்றம், குரல், நடிப்பு என எல்லாம் ரஜினிகாந்துக்கு அவ்வளவு பிடித்தது என்று தெரிவித்துள்ளார். மேலும்  இரண்டு பெரிய நடிகர்கள் ஒருவருக்கொருவர், மற்றவரது திறமையை மதித்துக் கொண்டது பார்க்க அவ்வளவு இதமாக இருந்தது என்று பகிர்ந்துள்ளார்.

மேலும் பாட்ஷா படப்பிடிப்பின் போது நான் ரகுவரனுடன் நல்ல நண்பனாகிவிட்டேன். அவரின்றி படமே யோசிக்க மாட்டேன். 'பாபா' படத்தில் அவர் நடிக்க வேண்டியது. நானும் ரஜினிகாந்தும் பேசிக்கொண்டிருந்த போது, இருவருக்குமே வில்லன் கதாபாத்திரத்தில் ரகுவரன் நடித்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. ரகுவரனும் ஆர்வமாக இருந்தார். 

ஆனால் 'பாபா' என்ற நாயகனின் கதாபாத்திரத்தை அவர் படத்தில் சில காட்சிகளில் திட்ட வேண்டும். ரகுவரனோ தீவிர சாய்பாபா பக்தர். அதனால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ரகுவரன் தயங்கினார். இறுதியில் அவரில்லாமல் வேறொரு இந்தி நடிகரை அதில் நடிக்க வைத்தோம் என்று தெரிவித்துள்ளார்.

இன்று உயிரோடு இருந்திருந்தால் இன்னும் பல்வேறு விதமான கதாபாத்திரங்களை தனக்கே உரிய பாணியில் நடித்திருப்பார் என்றும் அவரது ஆழமான குரல் அதிசயமானது என்றும் தனது நினைவுகளில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com