போதை பொருள் விவகாரத்தில் ராணாவா? தந்தை அதிர்ச்சி

போதை பொருள் விவகாரத்தில் ராணாவா? தந்தை அதிர்ச்சி
போதை பொருள் விவகாரத்தில் ராணாவா? தந்தை அதிர்ச்சி
Published on

போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, நடிகர்கள் நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 
இந்நிலையில் நடிகர் ராணாவுக்கும் அவரது சகோதரர் அபிராமுக்கும் இதில் தொடர்புள்ளதாகவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் ஆந்திராவில் நேற்று செய்தி வெளியானது. இது அங்கு பரபரப்பைக் கிளம்பியுள்ளது. 
இதுபற்றி அதிர்ச்சியடைந்துள்ள ராணாவின் தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு கூறும்போது, ‘போதைப் பொருள் விவகாரத்தில் என் மகன்களை சம்மந்தப்படுத்துவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேவையில்லாமல் என் மகன்களை இதில் தொடர்படுத்தி அவர்களின் பெயரை கெடுக்க சிலர் நினைக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசில் இருந்து நோட்டீஸ் எதுவும் வரவில்லை’ என்றார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com