21 மாத பெண் குழந்தையை தத்தெடுத்தார் சன்னி லியோன்!

21 மாத பெண் குழந்தையை தத்தெடுத்தார் சன்னி லியோன்!
21 மாத  பெண் குழந்தையை தத்தெடுத்தார் சன்னி லியோன்!
Published on

நடிகை சன்னிலியோனும் அவரது கணவர் டேனியல் வெப்பரும் பெண்குழந்தைக்கு பெற்றோர் ஆகி இருக்கிறார்கள். ஆம், மகாராஷ்டிர மாநிலம், லடூரைச் சேர்ந்த  21 மாத பெண்குழந்தையை தத்தெடுத்து அந்தக் குழந்தைக்கு நிஷா கவுர் வெப்பர் என அவர்கள் பெயர் சூட்டியுள்ளனர். 

இதுகுறித்து சன்னி லியோன் கூறும்போது, நான் மகிழ்ச்சியாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருக்கிறேன். வித்தியாசமான உணர்வுகள் ஏற்படுகிறது. இயல்பாக அனைவரும் ஒன்பது மாதத்தில் குழந்தை பெற்றுக்கொள்வார்கள். நான் 21 மாத குழந்தைக்கு தாயாகி இருக்கிறேன். இப்போது, இந்தக் குழந்தை சிறியவளாக இருக்கிறாள். அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். அவளுக்காக நாங்கள் நிறையதிட்டங்களை வைத்திருக்கிறோம்’ என குதூகலிக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com