விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டாவிற்கு ஆதரவாக, ’வாழ்க்கையை உற்சாகமாக்கிடுங்கள்’ என்ற புகைப்படத்திற்கு பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் போஸ் கொடுத்துள்ளார்.
பீட்டா அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள சன்னி லியோன், திரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் அடிக்கடி பீட்டாவுக்கு ஆதரவாகக் கருத்துகளை கூறி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது வழக்கம். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், `வாழ்க்கையை உற்சாகமாக்கிடுங்கள்` என்ற தலைப்பில் புகைப்படம் ஒன்றுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
பீட்டா அமைப்புக்கு ஆதரவாக சைவ உணவுகளையே உண்ணுங்கள் என்று பிரச்சாரம் செய்யும்படி அமைந்துள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தின் மூலமாக தனது ரசிகர்களை சைவ உணவுக்கு மாறுங்கள் என்றும் சன்னி லியோன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பீட்டா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சன்னி லியோனின் சிறிய பேட்டி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
அதில், தனக்கு அதிகமாக சக்தி இருப்பதை தான் கவனித்திருப்பதாகவும், அதற்கு அதிகமான அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்வதே காரணம் என்றும் சன்னி லியோன் கூறியுள்ளார். 2016 ஆம் ஆண்டு பீட்டாவின் சிறந்த நபராக சன்னி லியோன் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.