“என்னைப் பற்றிய வதந்தியை நம்ப வேண்டாம்” - சுனைனா விளக்கம்

“என்னைப் பற்றிய வதந்தியை நம்ப வேண்டாம்” - சுனைனா விளக்கம்
“என்னைப் பற்றிய வதந்தியை நம்ப வேண்டாம்” - சுனைனா விளக்கம்
Published on

நடிகை சுனைனா தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’ போன்ற படங்கள் மூலம் அதிகம் அறியப்பட்ட நடிகை சுனைனா. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்து வருகிறார். அப்படி பதிலளித்த போது ரசிகர் ஒருவர், ‘உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளத்தில் செய்தி உலா வருகிறதே’ என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளித்த சுனைனா, “எனக்கு திருமணமானதாக வரும் தகவல் உண்மையில்லை. எனது திருமணம் முறையான அறிவிப்பு உடனே நடக்கும். ஆகவே வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

இவர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள ‘சில்லுக் கருப்பட்டி’யில் படத்தில் நடித்துள்ளார். இது சமீபத்தில்தான் திரைக்கு வந்துள்ளது. இந்தப் படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி உள்ளனர். இதில் இவருடன் இணைந்து சமுத்திரகனி, நிவேதிதா சதீஷ், லீலா சாம்சன், பேபி சாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து, இயக்குநர் ரஞ்சித் அவரது ட்விட்டர் பக்கத்தில், “மிக சரியாக கோர்க்கப்பட்ட நான்கு கதைகள்! மனிதத்தின் தேவை அன்பு. திரை முழுக்க கடத்தி, பார்வையாளர்களை தித்திக்க வைத்திருக்கிறது. இந்தச் சில்லுக்கருப்பட்டியை சுவைக்க தந்த இயக்குநருக்கு நன்றி” எனக் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com