’அமரன்’ ஆல் நிம்மதி இழந்த மாணவர்.. 1 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்.. வசந்தபாலன் பகிர்ந்த சுவாரஸ்யம்!

அமரன் படத்தில், செல்போன் எண் காட்சிப்படுத்தப்பட்டதால், அந்த எண்ணை பயன்படுத்தும் மாணவர் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இயக்குநர் வசந்தபாலனும் சண்டகோழி திரைப்படத்தின்போது நிகழ்ந்த சுவாரஸ்ய நிகழ்வொன்றை பகிர்ந்துள்ளார்.
சிவகார்த்திகேயன், லிங்குசாமி, வசந்தபாலன்
சிவகார்த்திகேயன், லிங்குசாமி, வசந்தபாலன்pt web
Published on

அமரனால் பாதிப்பு - ஒரு கோடி இழப்பீடு

அமரன் திரைப்படத்தில், நடிகை சாய் பல்லவி ஒரு துண்டு சீட்டில் தனது தொலைப்பேசி எண்ணை கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த தொலைப்பேசி எண், சென்னையை சேர்ந்த வாகீசன் என்ற மாணவர் பயன்படுத்தி வரும் நிலையில், சில நொடிகள் மட்டுமே வந்த அந்த காட்சியால், மாணவர் வாகீசன் பல நாட்களாகவே தூங்கவும், படிக்கவும் முடியாமல் தவித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அமரன்
அமரன்pt web

பலரும் தொடர்ந்து வாகீசனை தொலைப்பேசியில் அழைப்பதாக கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாமல் தவிக்கும் வாகீசன், திரைப்படக் குழுவினரை சமூக வலைத்தளம் மூலம் தொடர்புகொள்ளவும் முயற்சித்துள்ளார். எனினும், படக்குழுவினரிடம் இருந்து எந்த பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில், பட நிறுவனத்திடம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வாகீசன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சிவகார்த்திகேயன், லிங்குசாமி, வசந்தபாலன்
”சீறும் புயலாய் என்னை மாற்றியவர்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!

இயக்குநர் வசந்தபாலன் பகிர்ந்த சுவாரஸ்யம்

இந்நிலையில் இயக்குநர் வசந்தபாலனும் தனது சுவாரசிய நிகழ்வொன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சண்டக்கோழி திரைப்படம் வெளியீட்டுக்கு முந்தைய நாள் சிறப்புக்காட்சியும் முதல் நாள் முதல் காட்சியும் பார்த்த நண்பர்கள் "சண்டக்கோழி திரைப்படம் பத்து ரன்!" என்று பாராட்டி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தனர். நான் லிங்குவிற்கு படம் பார்த்த நண்பர்கள் இப்படி பாராட்டி செய்தி அனுப்பியுள்ளார்கள், மாபெரும் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று லிங்குவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். லிங்குவும் நன்றி தெரிவித்து பதிலிட்டான்.

அச்சமயத்தில் நான் மதுரையில் வெயில் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அன்று பரத், பாவனா சம்மந்தமான காட்சி. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை ஒட்டியுள்ள ஜனநெருக்கடியான பகுதிகளில் நடத்த திட்டமிட்டு வேலைகளில் இறங்கியிருந்தேன். நானும் கேமராவும் மறைவான இடங்களில் இருந்து கொண்டு என் அலைபேசி வாயிலாக உதவியாளர்களுக்கும் பரத்திற்கும் உத்தரவுகள் தந்தவண்ணம் இருந்தேன். காலை 7 மணியிலிருந்தே சம்மந்த சம்மந்தமில்லாத எண்களிலிருந்து என்னை அழைத்து நீங்க தான் நடிகர் விஷாலா? இயக்குநர் லிங்குசாமியா? என்றும் இடைவிடாத போன் அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.

சிவகார்த்திகேயன், லிங்குசாமி, வசந்தபாலன்
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்| ” எந்த அனுமதியும் இதுவரை வழங்கப்படவில்லை" - தமிழக அரசு கொடுத்த விளக்கம்

நாமும் இழப்பீடு கேட்கலாம் போலயே

என் படப்பிடிப்பு வேலையவே செய்ய முடியாத வண்ணம் இடைவிடாத அழைப்புகள். தினத்தந்தி விளம்பரத்தில் உங்கள் நம்பர் போட்டுருக்கு சார் என்றார் ஒருவர். தினத்தந்தி வாங்கி பார்த்தால் சண்டக்கோழி திரைப்பட விளம்பரத்தில் நான் லிங்குசாமிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியைப் பதிவிட்டு கீழே என் அலைபேசி நம்பரைப் போட்டிருந்தார்கள். கடுப்பாகி போனை அணைத்து விட்டெறிந்தேன். அன்று படப்பிடிப்பு முடிந்து இரவு லிங்குசாமியிடம் ஏண்டா இப்படி போட்டீங்க? என்றேன். படத்தைப் பற்றிய பாராட்டுகளை இப்படி புதிய விளம்பர உத்தி வாயிலாக விளம்பரம் செய்ய முயன்றோம் என்று பதிலுரைத்தான்.

படம் மாபெரும் வெற்றி என்கிற மகிழ்ச்சியில் இருந்தான் எதற்கு இந்த நேரத்தில் என் சங்கடங்களை அவனிடம் பகிர வேண்டுமென அதைப் பற்றி பேசாமல் வாழ்த்துகளைப் பகிர்ந்து விட்டு அலைபேசியை அணைத்தேன். நீண்ட இரவு முழுக்க நீங்க விஷாலா லிங்குசாமியா என்று தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து ஒரு மாதம் வரை வந்த வண்ணம் இருந்தது. அந்த நம்பரை மாற்றிய பிறகு தான் தப்பித்தேன். நாமும் லிங்குவிடம் இழப்பீடு கேட்கலாம் போலயே… டே நண்பா! குடும்பத்தோடு கேன்டில் லைட் டின்னர் தா !” என தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், லிங்குசாமி, வசந்தபாலன்
டங்க்ஸ்டன் சுரங்க ஏலம் | ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி சு. வெங்கடேசன் கடிதம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com