விருது போட்டியில் இருந்து திடீரென விலகிய மோகன்லால், மஞ்சு வாரியர்!

விருது போட்டியில் இருந்து திடீரென விலகிய மோகன்லால், மஞ்சு வாரியர்!
விருது போட்டியில் இருந்து திடீரென விலகிய மோகன்லால், மஞ்சு வாரியர்!
Published on


கேரள அரசு ஒவ்வொரு வருடமும் திரைப்பட கலைஞர்களுக்கான விருதுகளை அறிவித்து, வழங்கி வருகிறது. 2018 ஆம் ஆண்டுக்கான விருது களை, கலாசார அமைச்சர் ஏ.கே.பாலன் திருவனந்தபுரத்தில் நேற்று அறிவித்தார். இதில், சிறந்த நடிகர் விருது, ’கேப்டன்’ மற்றும் ’ஞான் மேரிகுட்டி’ படங்களில் சிறப்பாக நடித்ததற்காக ஜெயசூர்யாவுக்கும், ’சூடானி ஃபிரம் நைஜீரியா’ படத்தில் நடித்த சவுபின் ஜாகீருக்கும் அறிவிக் கப்பட்டுள்ளது. சிறந்த நடிகை விருது, ’சோலை’ மற்றும் ’ஒரு குப்புற சித்த பையன்’ படங்களில் நடித்த நிமிஷா சஜையனுக்கு வழங்கப்படுகிறது.

(ஜெயசூர்யா)

இந்நிலையில் இந்த விருது போட்டியில் இருந்து மோகன்லாலும் மஞ்சுவாரியரும் விலகியது இப்போது தெரிய வந்துள்ளது. இந்த விருதுகளை தேர்வு செய்ய பிரபல இயக்குனர் குமார் சஹ்னி தலைமையில், நடிகை நவ்யா நாயர் உள்ளிட்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு, ’ஒடியான்’, ’காயம்குளம் குச்சுன்னி’ படங்களில் நடித்த மோகன்லாலை, சிறந்த நடிகராகவும் ’ஒடியான்’, ’ஆமி’ படங்களில் சிறப்பாக நடித்த மஞ்சு வாரியரை, சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்தது. இதைக் கேள்விப்பட்ட மோகன்லால் தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதே போல மஞ்சு வாரியரும் அறிவித்தாராம். இதனால் மற்றவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

சிறந்த நடிகர் விருதுக்கு மோகன்லால் தவிர, ஜெயசூர்யா, பஹத்பாசில், ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் சிறந்த நடிகை விருதுக்கு மஞ்சு வாரியர் தவிர, ஊர்வசி, ஐஸ்வர்யா லட்சுமி, அனு சிதாரா ஆகியோரும் தேர்வு பட்டியலில் இருந்தனர். எதற்காக இவர்கள் போட்டியில் இருந்து விலகினர் என்பது தெரியவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com