’வெயிட் பண்ணுங்க’: தெலுங்கு நடிகர் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்!

’வெயிட் பண்ணுங்க’: தெலுங்கு நடிகர் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்!
’வெயிட் பண்ணுங்க’: தெலுங்கு நடிகர் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்!
Published on

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் ராஜேந்திர பிரசாத் மீது நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி தெலுங்கு திரையுலகினர் தன்னைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக்கொண்டனர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர் அடுத்து தமிழ்த் திரையுலகினர் மீதும் பாலியல் புகார்களை கூறினார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி உட்பட பலர் மீது பரப்பரப்பு புகார் கூறியிருந்தார். இதற்கிடையே அவர் வாழ்க்கை கதை சினிமாவாகிறது. இதில் அவரே நடிக்கிறார். 

இந்நிலையில் அவர் பிரபல தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் பற்றி புகார் கூறியுள்ளார். இவர் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். 

(’குயிக் கன் முருகன்’ படத்தில் ராஜேந்திர பிரசாத்)

இவர் பற்றி ஸ்ரீரெட்டி தனது முகப்புத்தகத்தில், ’மிஸ்டர் ராஜேந்திர பிரசாத் மனரீதியாக பாதிக்கப்பட்ட மனிதர். தயவு செய்து உடனடியாக மனநல மருத்துவமனையில் சேருங்கள். உங்கள் அகராதியில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்பது தெரியும். உங்களை பற்றிய தெளிவான ரகசியங்களை விரைவில்  வெளியிடுகிறேன் சார்’ என்று தெரிவித்துள்ளார்.

இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com