நடிகை ஸ்ரீரெட்டிக்கு எதிராகப் போராட்டம்: ’ஆம்பள’ நடிகை கைது!

நடிகை ஸ்ரீரெட்டிக்கு எதிராகப் போராட்டம்: ’ஆம்பள’ நடிகை கைது!
நடிகை ஸ்ரீரெட்டிக்கு எதிராகப் போராட்டம்: ’ஆம்பள’ நடிகை கைது!
Published on

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்திய நடிகை மாதவி லதா கைது செய்யப்பட்டார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக குற்றம் சாட்டி இருந்தார், நடிகை ஸ்ரீரெட்டி. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இயக்குனர் சேகர் காமுலா, நடிகர் ராணாவின் தம்பியும் தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனுமான அபிராம் டகுபதி, இயக்குனர்கள் கோனா வெங்கட், கொரட்டலா சிவா, நடிகை ஜீவிதா ஆகியோர் மீதும் பாலியல் புகார் கூறினார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பாலியல் ரீதியாக தாங்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, துணை நடிகைகள் சிலர் நேற்று முன் தினம் மீடியாவை சந்தித்தினர். அப்போது சிலர் கண்ணீர் வீட்டு பேட்டியளித்தனர். 

ஸ்ரீரெட்டி கூறும்போது, ’நடிகர் பவன் கல்யாண், பாலியல் புகார் பிரச்னையை பொதுவெளியில் சொல்வதை விட்டுவிட்டு, போலீசில் புகார் கொடுக்கச் சொல்லலாம் என்கிறார். அவருக்கு நன்றி. அவரை அண்ணனாக நினைத்தேன். அதற்காக என்னை நானே செருப்பால் அடித்துக்கொள்கிறேன்’ என்று செருப்பால் அடித்துக்கொண்டார். இது பவன் கல்யாண் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ஸ்ரீரெட்டிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில் தெலுங்கு நடிகை மாதவி லதா, (இவர் தமிழில் விஷாலின் ’ஆம்பள’ படத்தில் நடித்திருந்தார்) பவன் கல்யாணை எப்படி குறைசொல்லலாம் என்று கூறி பிலிம்சேம்பர் முன்னால் போராட்டம் நடத்தினார். அப்போது அவரும் அவரோடு வந்தவர்களும் ஸ்ரீரெட்டிக்கு எதிராகக் கோஷமிட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். அவர்கள் செல்லாததால் கைது செய்தனர். இதுபற்றி மாதவி லதா கூறும்போது, ‘முதன்முறையாக போலீஸ் ஸ்டேஷன் சென்றேன். அங்கு சிறையில் இருந்தது வித்தியாசமாக இருந்தது. ஒரு ஃபோன் செய்துகொள்ளக் கூட போலீசார் அனுமதிக்கவில்லை. இருந்தாலும் சிறையில் இருந்ததில் மகிழ்ச்சிதான்’ என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com