சூதாட்டப் புகாரில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இப்போது, ’டீம்5’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் அவர் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார் மற்றொரு ஹீரோயினாக மலையாள நடிகை பேர்ள் மணி நடிக்கிறார். ஒளிப்பதிவு, சைஜித். இசை, கோபிசுந்தர். கதை, திரைக்கதை எழுதி சுரேஷ் கோவிந்த் இயக்குகிறார்.
ராஜ் ஜக்காரியாஸ் தயாரிக்கும் இந்தப் படம் பற்றி, சுரேஷ் கோவிந்த் கூறும்போது, ‘ இது புது மாதிரியான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும். இந்திய சினிமாவில் புது ஸ்டைல். பைக் ஸ்டன்டை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பைக் ஸ்டன்ட் ஒரு தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப் பட்டு அதற்கு விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த விஷயம் மக்களுக்குப் பெரிதாக போய் சேரவில்லை. இந்த படத்தின் மூலம் இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறது என்று மக்களுக்கு தெரியவரும். ஸ்ரீசாந்த், நிக்கிகல்ராணி, பேர்ள் மணி, தேஷ் பாண்டே இந்த 4 நண்பர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் கதை’ என்றார்.