SQUID GAME SEASON 2 | இந்த முறை என்ன என்ன விளையாட்டெல்லாம் இருக்குமோ..?

SQUID GAME தொடரின் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது.
SQUID GAME SEASON 2
SQUID GAME SEASON 2web
Published on

உலக அளவில் ஹிட் அடிக்கும் வெப் சீரிஸ் என்றால் மாயாஜாலம், பீரியட் டிராமா, ஹாரர், குடும்ப உறவு, அடல்ட் காமெடி, ஃபிரெண்ட்ஷிப் என ஏதாவது ஒரு ஸ்பெஷல் விஷயம் இருக்க வேண்டும். கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஸ்பார்ட்டகஸ், ஃபிரென்ஸ், SUITS, PRISON BREAK என உலக அளவில் ஹிட் அடித்த எல்லா தொடர்களும் இதனுள் அடங்கிவிடும். கேமிங் சீரிஸ் என வைத்துக்கொண்டாலும், அதில் பெரும்பாலும் ஃபேன்டஸி உலகமே வியாபித்து இருக்கும். இவை எல்லாவற்றிலும் இருந்து மாறுபட்ட கதையுடன் வந்து உலக அளவில் ஹிட் அடித்தது SQUID GAME. அப்படி SQUID GAMEல் என்ன ஸ்பெஷல் என்றால், சிம்பிளாக இருந்ததுதான் ஸ்பெஷல்.

MAKE IT SIMPLE என்பார்களே, ஸ்குவிட் கேமிங் கதையை அப்படித்தான் வடிவமைத்திருந்தார் (Hwang Dong-hyuk) ஹுவாங் டாங் ஹூக்.

SQUID GAME SEASON 2
”இந்திய அணி ஏன் பாகிஸ்தானில் விளையாட மறுக்கிறது?” - ஐசிசி இடம் விளக்கம் கேட்கும் பாகிஸ்தான்!

SQUID GAME முதல் பாகத்தின் மையக்கரு என்ன?

தென் கொரியாவின் சீயோல் நகரத்தைச் சேர்ந்த ஹூவாங் இயல்பிலேயே ஒரு காமிக்ஸ் பிரியர். இவர் எழுதி இயக்கிய முதல் படமான MY FATHER அப்பாவைத் தேடும் மகன் குறித்தது. மனிதர்களின் உணர்ச்சிகள் தான் ஹூவாங் டாங் ஹூக் கதைகளின் ஆன்மா. SQUID GAMEல் குழந்தைத்தன விளையாட்டுக்களை கருப்பொருளாக அவர் எடுத்துக்கொண்டாலும் அதன்வழி அவர் சொல்ல வருவது மனித மனங்களின் ஊசலாட்டங்களைத்தான். சாமான்யனின் கழுத்தில் எப்போதும் தொங்கும் கத்தி அவன் வாங்கிக் குவித்திருக்கும் கடன்தான். ஹோம்லோன், கார் லோன், எஜுகேசனஸ் லோன் என ஆரம்பித்து மனிதன் வளர வளர அவனுடன் அவன் வாங்கிய கடனும் வளர்ந்துகொண்டே வருகிறது. இதைத்தான் SQUID GAMEன் கருவாக எடுத்துக்கொண்டார். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் மிகவும் எளிமையானது. SQUID GAME மெகா வெற்றிக்குப் பிறகு ஹூவாங் பெரும் பணக்காரர் என்றாலும், அதற்கு முன்னர் அவரும் கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளான நபர்தான்.

SQUID GAME
SQUID GAME

தீராத கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட 456 பேரை தேர்ந்தெடுத்து விளையாட சொல்கிறார்கள். வென்றால் 45.6 பில்லியன் பரிசுத்தொகை. தோற்றால் வேறொன்றுமில்லை மரணம்தான். ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஆட்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக சிலர் ஏமாற்றவும் செய்கிறார்கள். ஆனால், வாழ்க்கை என்னும் போட்டியில் மோசடிக்கும் இடம் உண்டுதானே. அதையும் கடந்து யார் இறுதியில் வென்றார்கள் என்பதுதான் முதல் பாகம். முதல் பாகம் ஒரிஜினல் வெர்சனே பல நாடுகளில் அசுர ஹிட் அடித்தது. இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்காத நெட்பிளிக்ஸ், சில நாட்களுக்குப் பிறகுதான் தமிழில் டப்பிங் கூட செய்தது. முதியவர் கதாபாத்திரத்திற்கு நாசர் குரலுதவி செய்திருந்தார்.

SQUID GAME SEASON 2
அஜித், சூர்யா, தனுஷ் பட வாழ்நாள் சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயன்..? ரூ.250 கோடியை கடந்த அமரன்!

முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு, SQUID GAME ஐடியாவை வைத்து YOUTUBE புகழ் MR BEAST அவராகவே இந்தப் போட்டியை நடத்தினார். வென்றால் $456,000 அமெரிக்க டாலர் பணம். தோற்றால் மரணம் எல்லாம் இல்லை பாஸ், அவுட் அவ்வளவுதான். நிஜமாகவே நடத்தப்பட்ட இந்த போட்டியை யூடியூபில் பார்த்தவர்கள் மட்டும் 68 கோடி பேர்.

இதென்னடா இது யார் யாரோ சம்பாதிக்கிறார்கள் என மூளையைக் கசக்கி யோசித்த நெட்பிளிக்ஸ், Squid Game: The Challenge என்னும் ரியாலிட்டி ஷோவை நடத்தியது. 456 வீரர்கள் விளையாட வேண்டும். 4.56 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை. இத்தனை வீரர்களும், இவ்வளவு பெரிய பரிசுத்தொகையும் ஒரு ரியாலிட்டி ஷோவில் வழங்கப்பட்டது இதுவே முதல் முறை. ரீல் தொடரிலாவது நம்முடன் எமோசனலாக கனெக்ட் ஆன நபர்தான் வெல்வார். ஆனால், நிஜமாக நடைபெற்ற ரியாலிட்டி ஷோவிலோ அடுத்தவர்களை ஏமாற்றிய ஒரு பெண்தான் கோப்பையை வென்று செல்வார். உண்மை எப்போதும் கசக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தது இந்த, Squid Game: The Challenge.

SQUID GAME
SQUID GAME

Squid Game தொடரின் இரண்டாவது சீசன் டிசம்பர் 26ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த கேமுக்கு மொத்தமாய் முடிவுகட்ட , முதல் சீசனில் வென்ற போட்டியாளரே மீண்டும் களம் இறங்கவிருக்கிறார்., இந்த சீசன் எப்படி இருக்க போகிறது, என்ன என்ன மாதிரியான தகிடுதத்தோம் எல்லாம் நடக்கவிருக்கிறது என்பதைப் பார்க்க இப்போதே மக்கள் நெட்பிளிக்ஸும் கையுமாக இருக்கிறார்கள்.

SQUID GAME SEASON 2
ரிஷப் பண்ட்டை தூக்க பக்கா பிளான்.. 17 வயது தொடக்க வீரரை குறிவைத்த தோனி! CSK-வின் ஸ்மார்ட் மூவ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com