நடிகர் ராதா ரவியின் பட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாடகி சின்மயி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
பாடகி சின்மயி, ‘மீடூ’ சர்ச்சைக்குப் பிறகு மீடியாவின் செய்திகளில் அதிகம் அடிபட ஆரம்பித்திருக்கிறார். அவர் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து பெரும் சர்ச்சையை எழுப்பினார். அதற்கு உரிய முறையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார் என வைரமுத்து பதிலளித்திருந்தார். அதன்பிறகு ‘மீடூ’ புகார் கர்நாடக இசை கலைஞர்கள் பக்கமும் பாய்ந்தது. அதற்காக பத்திரிகையாளர் மன்றத்தில் சின்மயி தலைமையில் லீனா மணிமேகலை, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் தங்கள் தரப்பு விளக்கத்தை முன் வைத்தனர். அதன் பிறகு அந்தச் சர்ச்சை மெதுவாக திசை திரும்பியது.
இந்நிலையில் நடிகர் ராதா ரவி குறித்து பாடகி சின்மயி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ராதாரவி தன் பெயருக்கு முன்னாள் போட்டுக் கொள்ளும் டத்தோ பட்டம் அவருக்கு வழங்கப்படவே இல்லை. அது குறித்து மலேசியாவின் முக்கிய அதிகாரிக்கு மின்னஞ்சல் அனுப்பி விளக்கம் கேட்டேன். ராதாரவியின் டத்தோ பட்டமே பொய். அந்தப் பட்டத்தை நாங்கள் வழங்கவில்லை. அரசு ஆவணங்களில் அவரது பெயர் இல்லை. இது தொடர்பாக விரைவில் ஒரு அறிக்கையை வெளியிடுவோம்” எனக் கூறியுள்ளனர். இதற்கு ஆதாரமாக ‘மலாய் மெயில்’ பத்திரிகைக்கு பிரசாந்த் குமார் பிரகாசம் அளித்துள்ள பேட்டியின் சுட்டியின் இணைத்துயும் அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் நான் கூறிய இந்தச் செய்தியை நடிகர் ராதாரவி, பத்திரிகைகளில் அந்த மெயிலே பொய் என கூறியுள்ளார். நான் பொய் சொல்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.