புகழ் பெற்ற காமிக்ஸ் ஹீரோவான ’ஸ்பைடர்மேன்’ படங்களை இனி தயாரிக்கப் போவதில்லை என்று மார்வெல் நிறுவன தலைவர் அறிவித்திருப்பது ஏமாற்றமளித்திருப்பதாக சோனி தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு டிஸ்னி மற்றும் சோனி நிறுவனத்திற்கும் இடையே உருவான ஒப்பந்தப்படி, ஸ்பைடர்மேன் திரைப்படங்கள் இவ்விரு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு வெளிவந்தன. லாபத்தை இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொண்டன.
டிஸ்னியின், மார்வெல் காமிக்ஸ் புத்தக கதாபாத்திரமான ஸ்பைடர்மேனை அப்படியே கண்முன் கொண்டு வந்தார், அதனை ஏற்று நடித்த டாம் ஹாலண்ட். உலக அளவில் ஸ்பைடர்மேன் திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் வசூலை யும் வாரிக் குவித்தன. சோனி நிறுவனம் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தின் திரை உரிமையை தன் வசம் வைத்துள்ளது. இந்நிலையில் இத்திரைப்படங்கள் தயாரிப்பு குறித்து டிஸ்னி மற்றும் சோனி நிறுவனங்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து #SAVE SPIDERMAN என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டானது.
இந்நிலையில் கருத்துவேறுபாடுகளை அடுத்து, ஸ்பைடர்மேன் படங்களை இனி தயாரிக்கப்போவதில்லை என்று மார்வெல் தலைவர் கெய்ன் பெய்ஜ் அறிவித்துள்ளார். கெய்னின் முடிவு ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ள சோனி நிறுவனம், இருந் தாலும் அவரது முடிவுக்கு மதிப்பளிக்கிறோம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனால் ஸ்பைடர்மேன் திரைப்படங்கள் இனி வெளிவராது என்று கூறப்படுகிறது.