வாலி பட வழக்கு: நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி எஸ்.ஜே.சூர்யா சாட்சியம்

வாலி படத்தின் இந்தி உரிமை தொடர்பான வழக்கில், இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
 எஸ்.ஜே. சூர்யா
எஸ்.ஜே. சூர்யா முகநூல்
Published on

திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்ஜே சூர்யா இயக்கத்தில், நடிகர் அஜித், சிம்ரன் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான வாலி திரைப்படத்தின் இந்தி உரிமையை போனி கபூர் பெற்றுள்ளார்.

போனி கபூர்  -  எஸ்.ஜே. சூர்யா
போனி கபூர் - எஸ்.ஜே. சூர்யா முகநூல்

இதை எதிர்த்து எஸ்ஜே சூர்யா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இது குறித்து கூறுகையில், “எழுதியவருக்கே கதை சொந்தம் என்பதற்கான எந்த ஆவணங்களையும் எஸ்ஜே சூர்யா வழங்கவில்லை. ஆகவே படத்தின் காப்புரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம்” என்று கூறி படத்தின் இந்தி ரீமேக்கை தொடங்க இடைக்கால அனுமதி வழங்கியது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரதான வழக்கு தொடர்பாக, நான்காவது மாஸ்டர் கோர்ட் நீதிபதி கின்ஸ்லி கிரிஸ்டோபர் முன் நேரில் ஆஜராகி, இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா சுமார் இரண்டரை மணி நேரம் சாட்சியம் அளித்தார். குறுக்கு விசாரணை முடிவடையாததால், வழக்கு அடுத்த வாரத்திற்கு  ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com