“Terrorismனு யோசிச்சாலே” - ராணுவ வீரராக மிரட்டும் சிவகார்த்திகேயன்; தெறிக்கவிடும் ‘அமரன்’ டீசர்!

நடிகர் சிவகார்த்திகேயனின் 21 ஆவது திரைப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
Sivakarthikeyan
SivakarthikeyanPT
Published on

நடிகர் சிவகார்த்திகேயனின் 21 ஆவது திரைப்படத்தினை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேசனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகும் என்பதற்கான அப்டேட் வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பினைப் பெற்றிருந்தது. இந்த காணொளி சிவகார்த்திகேயன் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டும், துப்பாக்கி பயிற்சிகளை மேற்கொண்டும் இருக்கும்படியாக அமைந்திருந்தது. வீடியோவின் இறுதியில் Soldier's body heroes heart என இருந்தது. இதனை வைத்து ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்தில் சிவக்கார்த்திகேயன் ராணுவத்தில் பணிபுரிபவராக நடிக்கிறார் என்ற கருத்துக்களை பகிர்ந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயனின் பெயர் வி முகுந்த். மேஜர் முகுந்த் வரதராஜனை நினைவு கூறும் வகையில் சிவகார்த்திகேயன் கதாப்பாத்திரத்திற்கு முகுந்த் வி என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு நன்றி தெரிவித்து டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளனர். அதனால், இது மேஜர் முகுந்தின் பயோ பிக் என்பது உறுதியாகியுள்ளது. ராணுவ வீரரின் தோற்றத்திற்கு ஏற்க சிவகார்த்திகேயன் உடல் கட்டமைப்பும், ஹேர்ஸ்டைல் போன்றவை நேர்த்தியாக உள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படம் என்பதை டைட்டில் டீசர் காட்டுகிறது. படம் பெரிய அளவில் ஜம்மு காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

டைட்டில் டீசரில் ஆங்காங்கு வசனங்கள் கூர்மையாக அமைக்கப்பட்டுள்ளன. "Terrorismனு யோசிச்சாலே Rashtriya Rifles வந்து நெத்தி பொட்டுலயே சுடுவாண்டான்னு அலறணும்.. Who are we? Rashtriya Rifles" போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

மாவீரன் படத்தில் நடிப்பில் நல்ல பெயர் வாங்கி இருந்தார் சிவகார்த்திகேயன். அதை அமரன் படத்திலும் தொடர்வார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com