சீனாவில் வெளியாகும் சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷின் ‘கனா’

சீனாவில் வெளியாகும் சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷின் ‘கனா’

சீனாவில் வெளியாகும் சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷின் ‘கனா’
Published on

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’ சீன மொழியில் வெளியாகவுள்ளது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கனா’ விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுக்களைக் குவித்தது. இந்தப் படத்தை எஸ்.கே புரொடொக்‌ஷன் மூலமாக தயாரித்து தயாரிப்பாளராவும் அறிமுகமானார் நடிகர் சிவகார்த்திகேயன். ஏழைப் பெண்ணின் கிரிக்கெட் கனவை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ’கனா’வில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன.

இப்படத்தின், வெற்றியாலேயே போனி கபூர் தயாரிக்கும் ’ஆர்டிகிள் 15’ படமான ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தினை உதயநிதியை வைத்து இயக்கி வருகிறார் அருண்ராஜா காமராஜ். பாரட்டுக்களைக் குவித்த ‘கனா’ வரும் மார்ச் 18 ஆம் தேதி சீனாவில் சீன மொழியில் வெளியாகவுள்ளது. படக்குழுவினர் இதனைப் பெருமையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com