போட்டிக்கு ரெடி.. தீபாவளிக்கு களமிறங்கும் சிவகார்த்திகேயனின் ’அமரன்’ திரைப்படம்! வெளியான அறிவிப்பு

சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்திருக்கும் அமரன் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படம்
சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படம்x
Published on

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் திரு. ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று (31 அக்டோபர் 2024) உலகமெங்கும் வெளியாகிறது. திரைப்படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்திய ராணுவ வீரர்களின் தீரம்மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி இருக்கிறார். காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் இந்தப் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படம்
'All in One' - உச்சம்பெற்ற மாத ரீசார்ஜ் கட்டணங்கள்.. BSNL அறிமுகப்படுத்திய அட்டகாசமான புதிய திட்டம்!

யார்கூட வேணாலும் சண்டைக்கு ரெடி..

அமரன் திரைப்படம் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்திருக்கும் படக்குழு, இந்திய இராணுவ மேஜர் வரதராஜனாக நடிக்கும் கதாநாயகன் சிவகார்த்திகேயன் உணர்ச்சிகரமான நடிப்பையும், அதிரடி ஆக்சனையும் வெளிப்படுத்தியிருப்பதால் அமரன் திரைப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கதாநாயகி சாய் பல்லவி தனது ஆழமான நடிப்பினால் படத்துக்குச் சிறப்பானப் பங்களிப்பை அளித்துள்ளார்.

கதாநாயகன் சிவகார்த்திகேயன் படத்துக்கு முதன்முறையாக இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ். சண்டைக்காட்சிகளை அன்பறிவு மாஸ்டர்கள் மற்றும் ஸ்டெஃபான் ரிக்டர் இணைந்து வடிவமைத்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் சி.எச். சாய்.

புரொடக்‌ஷன் டிசைனர் ராஜீவன், கலை இயக்குனர் சேகர், எடிட்டர் ஆர். கலைவாணன் மற்றும் துணைத் தயாரிப்பாளர் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகியோர் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளனர்.

தன்னலமற்ற நமது இந்திய இராணுவ வீரர்களின் வீரத்தைக் கண்டு வியக்கவும், தியாகத்தைப் போற்றவும் தயாராகுங்கள், ஜெய்ஹிந்த்!” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

Sivakarthikeyan
SivakarthikeyanPT

ஏற்கனவே விடாமுயற்சி முதலிய பல முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியிடப்படும் என கூறப்படும் நிலையில், போட்டிக்கு தாங்கள் ரெடி என்னும் விதத்தில் படத்தின் மீதான நம்பிக்கையில் களம்கண்டுள்ளது அமரன் படக்குழு.

சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படம்
“லீவ் கேன்சல் பண்ணிட்டு ODI தொடருக்கு வாங்க..” சீனியர் வீரர்களுக்கு கவுதம் கம்பீர் கோரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com