அஜித், சூர்யா, தனுஷ் பட வாழ்நாள் சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயன்..? ரூ.250 கோடியை கடந்த அமரன்!

சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் கலக்ஸனில் பல முன்னணி நடிகர்களின் சாதனையை முறியடித்துள்ளது.
அமரன்
அமரன்pt web
Published on

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இருவரின் அசாத்தலான நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘அமரன்’.

2014-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 44-வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பட்டாலியனில் பணிபுரியும் போது, ஷோபியானில் நடந்த காசிபத்ரி ஆபரேஷனில் முக்கியப் பங்கு வகித்து உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் இயக்கப்பட்டுள்ளது.

அமரன்
அமரன்முகநூல்

இந்திய ராணுவ வீரர்களின் தீரம்மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் அமரன் திரைப்படம், முடிந்தளவு உண்மை காட்சிகளை படமாக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டுள்ளது.

ஆனால் காஷ்மீரில் நிலவும் அரசியல் என்ன என்பது குறித்தும், அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கை சூழல் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் அமரன் பேசவில்லை என பல்வேறு விமர்சனங்களும், அங்கிருக்கும் ஒரு சமூக மக்களை தவறாக சித்தரிப்பதாகவும் கூறி படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் அரங்கேறின.

அமரன்
அமரன்

கடுமையான விமர்சனங்கள், எதிர்ப்புகள் என நாளுக்கு நாள் பேசப்படும் ஒரு விஷயமாக அமரன் திரைப்படம் மாறினாலும், வசூலில் குறைவில்லாமல் படிப்படியாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

அமரன்
”காஷ்மீரின் அரசியலும் சூழலும் பேசப்படவில்லை..”- அமரன் குறித்து இயக்குநர் வசந்தபாலன் வைத்த விமர்சனம்!

ரூ. 250 கோடி வசூலை கடந்த அமரன்..

அக்டோபர் 31ம் தேதி வெளியான அமரன் திரைப்படம் 14வது நாளை கடந்து திரையரங்கில் அனைவரும் விரும்பி பார்க்கும் திரைப்படமாக இருந்துவருகிறது. பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை முறை, ரானுவத்திற்காக அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் உடனான காதல் வாழ்க்கை அதில் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் என பல முகங்களை வெளிப்படுத்தியிருக்கும் அமரன் படமானது அனைவரையும் திரையரங்கிற்கு இழுத்து வருகிறது.

amaran
amaran

உண்மை கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரின் நடிப்பும் அதிகப்படியான பாராட்டை பெற்றுவரும் நிலையில், படத்தின் வசூலும் உலகளவில் ரூ.263 கோடியை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமரன்
அமரன்

3வது வாரத்தை எட்டியிருக்கும் போதிலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் படத்தின் ஒடிடி வெளியீட்டை தள்ளிவைக்குமாறு கோரிக்கை வைத்திருந்தது. அதன்படி அமரன் படம் முதலில் திரையரங்குகளில் வெளியான 28 நாட்களுக்குப் பிறகு நெட்ஃபிக்ஸ்-ல் ஸ்ட்ரீம் செய்யத் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் OTT வெளியீட்டை ஒரு வாரம் தாமதப்படுத்த Netflix முடிவு செய்துள்ளது. OTT தளத்தில் டிசம்பர் 5-ஆம் தேதி அமரன் ஸ்டீம் ஆகும் என கூறப்படுகிறது.

அமரன்
”ஆயிரக்கணக்கான அபலைப் பெண்களை களங்கப்படுத்தும் அமரன்..” - மிக கடுமையாக விமர்சித்த ஜவாஹிருல்லா!

அஜித், சூர்யா,தனுஷ் வாழ்நாள் சாதனையை முறியடித்ததா அமரன்?

அமரன் படத்தின் வசூலை பொறுத்தவரையில் sacnilk.com படி, 13வது நாள் முடிவில் இந்தியாவில் மட்டும் ரூ.164.45 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சமீபத்திய அப்டேட்டின் படி இந்தியாவில் மட்டும் ₹189.25 கோடி வசூலும், வெளிநாட்டில் ₹73.75 கோடி வசூலும் ஈட்டியிருப்பதாகவும், அமரன் படத்தின் மொத்த உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் இப்போது ₹263 கோடியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ் முதலிய டாப் கலக்ஸன் படங்களின் வாழ்நாள் சாதனையை சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் முறியடித்துள்ளது.

amaran
amaran

இந்நிலையில் ரஜினியின் எந்திரன் பட வசூலான ரூ.290-300 கோடி வசூலை சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் இந்த வாரத்தில் கடந்துவிடும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அமரன்
விமர்சனங்களை கடந்து வசூல் சாதனை நிகழ்த்தும் 'அமரன்’.. ரூ 200 கோடி கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com