"தபு கேரக்டரில் நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு!" - 'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கில் சிம்ரன்

"தபு கேரக்டரில் நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு!" - 'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கில் சிம்ரன்
"தபு கேரக்டரில் நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு!" - 'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கில் சிம்ரன்
Published on

 தேசிய விருதுபெற்ற 'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் தபு காதபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கவுள்ளார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்திருந்தது  ’அந்தாதூன்’ திரைப்படம். ரூ.40 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.450 கோடி வசூல் செய்தது.

இந்தப் படத்தில் ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு சிறந்த நடிப்பிற்கான ஆயூஷ்மான் குரானாவுக்கு தேசிய விருது, சிறந்த இந்திப் படம், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளை 'அந்தாதூன்' அள்ளியது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை ’பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஜே.ஜே ஃப்ரெட்ரிக் இயக்க, நடிகர் பிரஷாந்த் நடிக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியும் முடித்துவிட்டார். கொரோனா சூழலால் படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதுகுறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு சிம்ரன் அளித்த பேட்டியில் ”அந்தாதூன் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல். தபுவின் கேரக்டரின் நான் நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு. மிகவும் சவாலான தைரியமான படம் முழுவதும் காணக்கூடிய கேரக்டர் அது.

பிரஷாந்த்துடன் மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஜே.ஜே ஃப்ரெட்ரிக்குடன் பணியாற்றவும் ஆவலாக இருக்கிறேன். அவரின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அருமையாக இருந்தது. 'அந்தாதூன்' ரீமேக் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கொடுக்கப்படும்” என்று உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார். தெலுங்கு 'அந்தாதூன்' ரீமேக்கில் தபு வேடத்தில் தமன்னா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com