கமல்ஹாசன் வருகை குறித்து அவரது மகள் ஸ்ருதிஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் கமல்ஹாசன், நேற்று மதுரையில் நடைபெற்ற முதல் மாநாட்டில் தனது கட்சிப்பெயரை அறிவித்தார். அத்துடன் தனது கட்சியின் கொள்கை வலதுசாரியும் அல்ல, இடதுசாரியும் அல்ல மையம் என்று அவர் கூறியுள்ளார். அதை வெளிக்காட்டும் வகையில் தனது கட்சியின் பெயரை, மக்கள் நீதி மய்யம் என்று வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது கட்சிக்கொடியில் உள்ள ஆறு கைகளும் ஆறு மாநிலங்கள் என்றும், அதில் உள்ள கறுப்பு திராவிடம், சிவப்பு உழைப்பு, நட்சத்திரம் மக்கள், வெள்ளை தூய்மை என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே கமலின் அரசியல் வருகை தொடர்பாக அவரது மகள் ஸ்ருதிஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தனது தந்தையான கமல்ஹாசன் லட்சக்கணக்கான மாற்றங்களை கொண்டுவந்து, அரசியலில் சீரமைப்பு செய்வதற்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். அத்துடன் கமல்ஹாசனுக்கு பிடித்த மகாத்மா காந்தியின் தத்துவத்தை போலவே, “நீ மாறினால் உலகம் தனாக மாறும்” என்பதன் அடிப்படையில் கமல் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இது உண்மை மற்றும் நீதிக்கான விடாமுயற்சி என்றும் ஸ்ருதி கூறியுள்ளார்.