ஸ்ருதிஹாசனுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஸ்ருதிஹாசனுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஸ்ருதிஹாசனுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Published on

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியான ஸ்ருதிஹாசன் பிறந்தநாளான இன்று அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் இன்று தனது 31வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர் என பல அவதாரங்களை எடுத்துள்ள ஸ்ருதிஹாசன் திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். ஸ்ருதிஹாசன் பிறந்தநாளான இன்று அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். #HappyBirthdayShrutihaasan என்ற ஹேஸ்டேக்கை டுவிட்டரில் உருவாக்கி அதை ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர். விஜய், அஜித், போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது சூர்யாவுடன் சிங்கம் 3 படத்தில் நடித்துள்ளார். மேலும் தனது தந்தையுடன் சபாஷ் நாயுடு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இசைத்துறையில் மிகவும் ஆர்வம் உள்ள ஸ்ருதிஹாசன் தனது 6-ம் வயதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் படத்தில் தனது முதல் பாடலை பாடினார். 2009-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு முதன்முதலில் இசை அமைத்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com