ஸ்ரத்தாவின் சந்தேகத்தைத் தீர்த்த ஆர்.ஜே.பாலாஜி

ஸ்ரத்தாவின் சந்தேகத்தைத் தீர்த்த ஆர்.ஜே.பாலாஜி
ஸ்ரத்தாவின் சந்தேகத்தைத் தீர்த்த ஆர்.ஜே.பாலாஜி
Published on

கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், ‘யு-டர்ன்’. இதில் ஹீரோயினாக நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் காற்றுவெளியிடை படத்தில் நடித்திருந்தார். இப்போது ’இவன் தந்திரன்’ படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்துள்ளார். ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 30-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. 

படம்பற்றி, ஸ்ரத்தா கூறும்போது, ’இதில் ஆஷா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். புதுமையான கேரக்டர். இங்கே உள்ள கல்வி முறையும் அதன் அரசியலும் என்னை எப்படி பாதிக்கிறது என்பது போல் கதை நகரும். கவுதம் கார்த்திக் சிறந்த மனிதர். எளிதில் யாருடனும் பழகிவிட மாட்டார். அப்படி பழகிவிட்டால் உண்மையான நண்பராக இருப்பார். இந்தப் படம்தான், கதாநாயகியாக எனக்கு முதல் தமிழ்ப் படம். நீளமான வசனம், உணர்வுபூர்வமான காட்சிகள் போன்றவை எனக்கு சவாலான ஒன்றாக இருந்தது. இதில் ஆர்.ஜே.பாலாஜியும் என்னுடன் நடித்துள்ளார். அவரை ’காற்று வெளியிடை’ படபிடிப்பின் போது சந்தித்தேன். தமிழ் சினிமா தொடர்பாக எந்த சந்தேகமாக இருந்தாலும் பாலாஜியிடம்தான் கேட்பேன். அவரை நன்றாக தெரியும் என்பதால் நிறைய கேட்டு தெரிந்துகொள்வேன். ’இவன் தந்திரன்’ கண்டிப்பாக இளைஞர்களுக்கு பிடித்த படமாக இருக்கும்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com