நடிகர் தனுஷின் மூன்றாவது பாலிவுட் படமான ’அட்ராங்கி ரே’வின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது.
இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ படத்தில்தான் தனுஷ் முதன் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதற்கடுத்ததாக, அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் தோன்றினார். தற்போது, மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கும் அட்ராங்கி ரே படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகானுடன் இணைந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் வாரணாசியில் ஆரம்பிக்கப்பட்ட இதன் படபிடிப்பு கொரோனாவால் தடைப்பட்டுப்போனது. சமீபத்தில் தமிழக அரசு சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி அளித்துள்ளதால், மீண்டும் ’அட்ராங்கி ரே’ படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது.
20 நாட்கள் வரை மதுரையில் ஷூட்டிங் நடத்திவிட்டு அடுத்தக்கட்ட படபிடிப்புகளை டெல்லி மற்றும் மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு