‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய ஷில்பா ஷெட்டி - வைரலாக்கிய விஜய் ரசிகர்கள்

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய ஷில்பா ஷெட்டி - வைரலாக்கிய விஜய் ரசிகர்கள்
‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய ஷில்பா ஷெட்டி - வைரலாக்கிய விஜய் ரசிகர்கள்
Published on
விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய ஷில்பா ஷெட்டியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 
 
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்தது.  கொரோனா நோய்த் தொற்றால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் நாடே முடங்கியது. அதனையடுத்து திரையரங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஆகவே ‘மாஸ்டர்’ திட்டமிட்டபடி வெளியாகவில்லை. எனவே ‘டிக்டாக்’ போன்ற சமூக வலைத்தளத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் விஜய், ஆடிய ஆட்டத்தைப் போல ஆடி அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 
 
 
இந்நிலையில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்’  பாடலுக்கு நடனமாடி வீடியோவை ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் இடையே வைரலாகி உள்ளது. ஷில்பா ஷெட்டி சமூக வலைத்தளத்தில் மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறார். அவர் யோகா செய்வது போன்ற வீடியோ, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வீடியோ என்று  அடிக்கடி நிறையப் பகிர்ந்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே இப்போது விஜய் பாடலுக்கு நடனமாடி வெளியிட்டுள்ளார்.
 
முன்னதாக, ஷில்பா ஷெட்டி  'குஷி' படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்தப் படத்தில் விஜயுடன் இவர் ஆடிய பாடல் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com