தமிழிலும் வெளியாகும் ஷகிலா வாழ்க்கை வரலாற்று திரைப்படம் - கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ரிலீஸ்

தமிழிலும் வெளியாகும் ஷகிலா வாழ்க்கை வரலாற்று திரைப்படம் - கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ரிலீஸ்
தமிழிலும் வெளியாகும் ஷகிலா வாழ்க்கை வரலாற்று திரைப்படம் - கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ரிலீஸ்
Published on

இந்தியில் எடுக்கப்பட்ட நடிகை “ஷகிலா”வின் வாழ்க்கை திரைப்படம், தமிழில் மொழிமாற்றம் செய்து கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியிடப்படவுள்ளது.

மலையாளத்தில் ‘ப்ளே கேர்ள்ஸ்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷகிலா மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 110 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1990 களில் வயது வந்தோருக்கான படங்களில் நடித்து, தனக்கென ரசிகர் வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் ஷகிலா.

இந்நிலையில், ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கி இருக்கிறார், இந்திரஜித் லங்கேஷ்.  நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கையை, வயது வந்தோருக்கான படங்களில் நடித்ததற்காக, அவரது குடும்தினராலேயே புறக்கணிக்கப்பட்டதை, சினிமா உலகத்தினரே அவரது படங்கள் தடை செய்யப்படவேண்டுமென போராடியதை என அவரது வாழ்வின் அனைத்து பக்கங்களையும் கூறவுள்ளது.

நேரிடையாக இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது. மலையாள பதிப்பு மட்டும் கேரள மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது.

இப்படத்தில், ஷகிலாவாக ரிச்சா சத்தா நடிக்கிறார். ஷம்மி நன்வானி, சரவண பிரசாத் இப்படத்தை  தயாரித்துள்ளார்கள். ஷகிலா மலையாள படங்களில்தான் அதிகம் நடித்துள்ளார் என்பதால் கேரளா பகுதிகள் போன்று இருக்கவேண்டுமென கர்நாடகாவின் தீர்த்தஹல்லி பகுதிகளில், இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு சென்சாரில் A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com