மலையாள சினிமாவை சுழன்றடிக்கும் பாலியல் புகார்கள்; மௌனம் காக்கும் தமிழ் நட்சத்திரங்கள்! நடப்பது என்ன?

மலையாளத் திரையுலகத்தை சுற்றிச்சுழன்றடித்துக் கொண்டிருக்கின்றன பாலியல் புகார்கள். அண்டை மாநிலத்தில் அவ்வளவு சப்தம் கேட்கும்போது, நாட்டின் முக்கிய திரை மையமான தமிழ்த்திரையுலகமோ மௌனம் காக்கிறது. ஏன் இந்த மௌனம்? என்ற கேள்வியும் எழுகிறது.
அஜித், ரஜினி, கமல், விஜய்
அஜித், ரஜினி, கமல், விஜய்pt web
Published on

சுழன்றடிக்கும் ஹேமா கமிட்டி

மலையாளத் திரைப்படங்கள் சில அண்மையில் தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்டன. சாமான்ய ரசிகர்கள் மட்டுமின்றி, கமல்ஹாசன் உட்பட திரைநட்சத்திரங்களே பாராட்டியதோடு, படக்குழுவினரை சந்தித்து உரையாடி ஊக்கமளித்தனர். இதுபோல கொண்டாட்டமான, பாராட்டத்தக்க தருணங்களை மதிப்பிடும்போது, அதே மலையாள திரையுலகில் நடந்துள்ள பாலியல் சுரண்டலை, அதிகாரத்தை வைத்துக்கொண்டு பெண்களை, நடிகைகளை பலவந்தப்படுத்திய புகார்களுக்கு ஏன் தமிழ்த்திரையுலகம் இத்தனை மௌனம் காக்கிறதோ தெரியவில்லை.

முன்னணி நட்சத்திரங்கள் யாரும் சமூக ஊடகங்களில் கூட பதிவிடாத நிலையில், அவர்களை நேரில் அணுக முற்பட்டபோது அவர்களின் தனி உதவியாளர்களிடம் கூட பேசமுடியவில்லை. அரசியல், சமூக விவகாரங்களில் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த் எந்த கருத்து தெரிவித்தாலும் முக்கியத்துவம் பெறும்.

கடந்த வாரம் நூல் வெளியீட்டு விழாவில் மூத்த அமைச்சர்கள் குறித்து ரஜினி பேசியது முக்கியத்துவம் பெற்றது. இந்நிலையில், அவரது கருத்தை அறிய முற்பட்டோம். ரஜினி ஊரில் இல்லை தற்போது எந்த கருத்தும் தெரிவிக்க வாய்ப்பில்லை என செய்தி தொடர்பாளர் கூறினார்.

அஜித், ரஜினி, கமல், விஜய்
கொல்கத்தா | கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர் பேசியதாக வைரல் ஆகும் ஆடியோ - உண்மை என்ன?

மௌனம் காக்கும் நட்சத்திரங்கள்

உலகநாயகன் கமல்ஹாசன் படப்பிடிப்பில் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அண்மையில் கட்சித் தொடங்கிய நடிகர் விஜய், இதுபற்றி எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. நடிகர் அஜித்தை பொறுத்தவரை அவர் பொதுவெளியில் தோன்றவும், கருத்துகூறவும் செய்ததில்லை. அவராகவோ, அவர் சார்பிலோ வெளியிடப்படும் செய்திகள்தான் எப்போதும்போல இப்போதும் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யாவின் கருத்தை அறிய முற்பட்டபோது அவர் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயத்தால் ஓய்வில் இருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித், ரஜினி, கமல், விஜய்
அபராதமே ரூ.908 கோடியா..! திமுகவின் பணக்கார நிர்வாகி.. யார் இந்த ஜெகத்ரட்சகன்?

நடிகை குஷ்பு, பாடகி சின்மயி போன்றோர் மலையாள திரையுலக விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள். ஆனால் தாங்கள்சார்ந்த திரையுலகில் ஒரு பிரச்னை எனும்போது கலைஞர்கள் ஏன் குரல் தருவதில்லை? பெண்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பாதது ஏன்? பெண்களுக்கு அளிக்கும் ஆதரவால் மட்டுமே அவர்கள் துணிந்து தங்கள் பிரச்னைகளை வெளியே சொல்லும் நம்பிக்கையைத் தரும். இந்த நம்பிக்கை இல்லாததால்தான் பெண்கள், தாங்கள் பிரபலமாக இருந்தாலும் தனிப்பட்டு சந்திக்கும் பாலியல் அத்துமீறல்களை வெளியே சொல்லும் துணிச்சலின்றி இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com