சமீப காலமாக ட்விட்டரில் கதைகள் சொல்ல ஆரம்பித்துள்ளார் செல்வராகவன். அவர் சார்லி சாப்ளின் பற்றி குறிப்பிட்டுள்ள கதையை பரவலாக எல்லோரும் ரசித்து வருகின்றனர்.
ஒருமுறை பலரும் நிறைந்துள்ள சபையில் சார்லி சாப்ளின் ஒரு ஜோக் சொன்னார். அதை கேட்டு சபையே சிரிப்பில் அதிர்ந்தது. கொஞ்ச நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூறினார். அப்போது பாதி பேர் மட்டுமே சிரித்தனர். மீண்டும் சிறிது நேரம் கழித்து ஜோக்கை கூறினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மட்டுமே சிரித்தனர். அவர் நான்காவது முறை கூறிய போது சபையில் அமைதி நிலவியது. அப்போது சாப்ளின் கூறினார். ஒரு ஜோக்கிற்கு மறுபடியும் மறுபடியும் சிரிக்காத நாம் ஒரே கவலையை நினைத்து நினைத்து ஏன் அழுகிறோம்?
இந்தக் கதையை கூறிவிட்டு அவர் உண்மை..உண்மை...என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவரிடம் பலர் சினிமா எடுக்க என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்புவதாகக் கூறி அதற்கு, உலகம் எப்போது தூங்குகிறதோ அப்போது நாம் வேலை செய்ய வேண்டும். எல்லோரும் வேலை செய்யும் போது நாமும் கூட வேலை செய்ய வேண்டும் என்று ஒரு பதிலையும் சொல்லியிருக்கிறார் செல்வராகவன்.