’சண்டக்கோழி 2’க்காக சென்னையில் உருவாகும் மதுரை!

’சண்டக்கோழி 2’க்காக சென்னையில் உருவாகும் மதுரை!
’சண்டக்கோழி 2’க்காக சென்னையில் உருவாகும் மதுரை!
Published on

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ’சண்டக்கோழி’. 2005-ல் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், இப்போது உருவாகிறது. 

விஷால் பிலிம் பாக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். இது அவருக்கு 25-வது படம். விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது. படத்துக்காக, சென்னை பின்னி மில்லில் ரூ.6 கோடி செலவில் 10 ஏக்கர் பரப்பளவில் அழகான மதுரை செட் உருவாக்கப்படுகிறது. அதற்கான பூஜை இன்று காலை பின்னிமில்லில் நடந்தது. 

விஷால் பிலிம் பாக்டரி இணை தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குனர் லிங்குசாமி மற்றும் கலை இயக்குனர் ராஜீவன் தொடங்கி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com