“Live and Let Live” - தன் உடல் எடை குறித்தான ரசிகரின் கமெண்ட்டுக்கு நடிகை சமந்தா Thug life பதிலடி!

தனது உடல் எடை குறித்து ட்ரோல் செய்தவர்களுக்கு நடிகை சமந்தா, “வாழு வாழ விடு.. இது 2024” என பதிலடி கொடுத்திருப்பது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
சமந்தா
சமந்தாமுகநூல்
Published on

தனது உடல் எடை குறித்து ட்ரோல் செய்தவர்களுக்கு நடிகை சமந்தா, “வாழு வாழ விடு.. இது 2024” என பதிலடி கொடுத்திருப்பது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழ் சினிமா மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என இந்திய அளவில் தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் நடிகை சமந்தா. பல வெற்றிப்படங்களின் மூலம் தற்போது வரை முன்னனி நடிகைகளில் ஒருவராக இருக்கும் இவர், சமீபத்தில் பாலிவுட்டில் ‘சிட்டாடல் ஹனி பனி’ (Citadel: Honey Bunny) என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

இதற்கான அடுத்தடுத்த பிரமோஷன்கள் வேலைகளில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெப் சீரிஸில் ஆக்‌ஷன் பறக்கும் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ள நடிகை சமந்தா, மீண்டும் தனது மிரட்டல் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்பதை அந்த படத்தில் ட்ரெய்லர்களில் காண முடிகிறது.

இந்தவகையில், தனது ரசிகர்களோடு கலந்துரையாடல்களை மேற்கொள்ள இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் சமீபத்தில் லைவ் ஒன்றில் உரையாடினார் சமந்தா. அப்போது, அவரிடம் ரசிகர்கள் பல கேள்விகளை கேட்கவே, அவர்களோடு தன் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

அதில் ஒரு ரசிகர், சமந்தாவை கொஞ்சம் உடல் எடையை அதிகரிக்குமாறு தெரிவித்து கமெண்ட் செய்திருந்தார்.

சமந்தாவிடம் உடல் எடையை அதிகரிக்குமாறு தெரிவித்த ரசிகர்
சமந்தாவிடம் உடல் எடையை அதிகரிக்குமாறு தெரிவித்த ரசிகர்

இதற்கு பதிலளித்த சமந்தா, “எனது எடை குறித்து மற்றொரு கருத்து... நான் எனது எடையை குறித்த பல்வேறு கருத்துக்களை சமீபத்தில் பார்த்து வருகிறேன்.

உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். நான் ஒரு கடுமையான strict anti-inflammatory diet-ஐ பின்பற்றி வருகிறேன். இது எனது உடலுக்கு தேவை. இதுதான் எனது உடலை அதிக எடையிலிருந்து தடுத்து, எனது உடல் நலனுக்கு (myositis) ஏற்றவாறு சரியான அளவில் என்னை வைத்திருக்க உதவுகிறது. தயவுசெய்து மனிதர்களை உடலை வைத்து தீர்ப்பிடும் கண்ணோட்டத்தை நிறுத்துங்கள். 2024-க்கு வந்துவிட்டோம் நாம். வாழு, வாழ விடு.. என்றிருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் சிலருக்கு சமந்தாவின் இந்த பதில் சரியான பதிலடியாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com