காலைப்பொழுதை இதமாக்க சமந்தா என்ன உணவை உட்கொள்கிறார் என்பது குறித்து விவரங்களை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல நடிகையும் நாக சைதன்யாவின் மனைவியுமான சமந்தா, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊரடங்கு காலத்தில் தான் செய்யும் நடவடிக்கைகள் குறித்து பகிர்ந்து வந்தார். குறிப்பாக ஊரடங்கு நேரத்தில் அவர் வீட்டில் வடிவமைத்திருக்கும் தோட்டம் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது. இந்நிலையில் அவர் தற்போது காலைப்பொழுதை மிக இதமாக கழிப்பதற்கு எந்த உணவை உண்கிறேன் என்பது பற்றியும் அதன் செய்முறை பற்றியும் விளக்கியுள்ளார்.
தேவையான பொருட்கள்
ஆளி விதைகள், சியா விதை, வாழைப்பழம், இளநீர், பசளி, சிவரிக்கீரை, ஒமேகா கலவை மாவு ( ஊட்டச்சத்து மிகுந்த விதைகள் அடங்கிய மாவு)
செய்முறை
ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் ஒமேகா கலவைவையை 10 நிமிடம் இளநீரில் ஊற வைக்க வேண்டும்.
இதற்கிடையில் இலைக்கோசு கீரை , பசளி, சிவரிக்கீரை உள்ளிட்டவற்றை நன்றாக 15 நிமிடம் நீரில் கழுவ வேண்டும்.
அதன் பின்னர் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து அதனுடன் வாழைப்பழம், வேண்டுமானால் உங்களது சத்துமாவையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஊட்டசத்து மிகுந்த ஆளி விதைகள், ஆன்டி ஆக்ஸிடண்டாக செயல்படும் ஒமேகா கலவை, புரதம் மற்றும் நார்ச் சத்துக்கள் மிகுந்த சியா விதைகள் உள்ளிட்டவை உங்களுக்கு நற்பலனை அளிக்க வல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.