ஒரே நாளில் சல்மான்கானுக்கு ஜாமீன்

ஒரே நாளில் சல்மான்கானுக்கு ஜாமீன்
ஒரே நாளில் சல்மான்கானுக்கு ஜாமீன்
Published on

பிரபல இந்தி நட்சத்திரங்களான சல்மான் கான், சைஃப் அலிகான், நடிகை தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் 1998 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த ‘ஹம் சாத் சாத் ஹே’ என்ற இந்தி படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டனர். அப்போது, அங்குள்ள காட்டில் வேட்டைக்குச் சென்றதாகவும், இதில் அரிய வகை மான்களை, நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் உட்பட 7 பேர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

கடந்த 20 ஆண்டுகள் இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டது.கடந்த மார்ச் 28-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையின்போது அனைத்து சாட்சியங்களும், விசாரணைகளும் நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேவ்குமார் காத்ரி ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி வழக்கு விசாரணை நடை பெற்றது. அப்போது  இந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி எனவும், வழக்கில் இருந்து சைஃப் அலிகான், தபு, சோனாலி உட்பட 5 பேர் விடுவிக்கபடுவதாக அறிவித்ததோடு, சல்மான்கானுக்கு  5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர். அன்றே சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் ஜோத்பூர் நீதிமன்றம் சல்மான்கானுக்கு ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com