சல்மான் கான் ஒருநாள் பிக்பாஸ் சம்பளம் 11 கோடி

சல்மான் கான் ஒருநாள் பிக்பாஸ் சம்பளம் 11 கோடி
சல்மான் கான் ஒருநாள் பிக்பாஸ் சம்பளம் 11 கோடி
Published on

இந்தி பிக் பாஸ் ஷோவை நடத்த சல்மான் கானுக்கு வழங்கப்படும் ஒருநாள் சம்பளம் பற்றிய செய்தி பாலிவுட் வட்டாரத்தில் பற்றி எரிந்து வருகிறது.

இந்தியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் சல்மான் கான். அவரது நிகழ்ச்சி 11-வது சீசனை விரைவில் ஆரம்பிக்க உள்ளது. இந்தில் மாபெரும் வெற்றி பெற்றதால்தான் பிற மொழிகளிலும் அந்த நிகழ்ச்சியை எடுத்து சென்றனர். கமல் தமிழில் பிக் பாஸாக உருவானதற்கு சல்மான் கான் தான் முன்னோடி. 

மறுபடியும் இந்தியில் தொடங்க இருக்கும் சீசனுக்கும் சல்மான் கான் தான் தொகுப்பாளர். இது பெரிய விஷயமில்லை. அவருக்கு வழங்க இருக்கும் சம்பளம்தான் தற்சமயம் பரபரப்பை கூட்டியுள்ளது.

பிக் பாஸ் 4-வது சீசன் முதல் 6-வது சீசன் வரை ஒரு நாளுக்கு இரண்டரை கோடி வாங்கினார் சல்மான். 7-வது சீசனில் அவரது சம்பளம் 5 கோடியாக உயர்ந்தது. 2014 ஆண்டு அது 5.5 கோடியாக ஏறியது. திரும்ப 2015-ல் எட்டு கோடியானது. தற்போது ஒரு நாள் ஷூட்டுக்கு 11 கோடி சம்பளம் வாங்க தொடங்கியுள்ளார். இந்த சம்பள உயர்வை கேட்டு உறைந்து போய் உட்கார்ந்திருக்கிறது பாலிவுட் உலகம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com