எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், ”லியோ படத்தை பார்த்துவிட்டு அதன் இயக்குநரை போனில் அழைத்து படத்தோட முதல்பாதி சூப்பர் சார். ஒரு படம் எப்படி பண்ணவேண்டுமென்று உங்களிடம் இருந்துதான் சார் கத்துக் கொள்ளணும்னு பாராட்டி பேசினேன். அதை அவர் கேட்டுக்கிட்டே இருந்தார்.
இரண்டாவது பாதி கொஞ்சம் சரியில்லை சார். அப்படீன்னு சொன்னதும் சார் நான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கேன்னு சொன்னாரு. சார் மதங்களில் ஒரு தகப்பனே தனது பிள்ளையை இது போன்ற நம்பிக்கையெல்லாம் கிடையாது சார்னு சொன்னதும் சார் சாப்பிட்டுகிட்டு இருக்கேன். அப்புறமா கூப்புடுறேன் சார்ன்னு சொல்லி போனை கட் பண்ணிவிட்டார். அதுக்கு அப்புறமா கூப்பிடவே இல்லை.
ஆனா படம் ரிலீஸான பிறகு எல்லாரும் வெச்சு செஞ்சாங்க. நான் சொன்னதை ஆலோசனையாக ஏற்று அதை மாற்றியிருக்கலாம். அதற்கு நேரம் இருந்தது. அந்த படத்தைப் பற்றி அத்தனை விமர்சனங்களும் நான் சொன்னதையே சொல்லியது. அவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் தைரியமும் பக்குவமும் இல்லை” என்று பேசினார்.
லியோ திரைப்படம் வெளியான தருணத்தில் படத்தின் இராண்டாம் பாதி மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதல் பகுதி தரமாக எடுக்கப்பட்டதாகவும், அதற்கு பொருத்தமே இல்லாதது போல் இராண்டாம் பாதி இருந்ததாக பலரும் கருத்துக்களை முன் வைத்து இருந்தனர். இத்தகைய விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதாக இயக்குநரும் பின்னர் தெரிவித்து இருந்தார்.