ரூ.120 கோடி வசூல்: விமர்சனங்களை வீழ்த்தி சாதனை படைத்த விவேகம்

ரூ.120 கோடி வசூல்: விமர்சனங்களை வீழ்த்தி சாதனை படைத்த விவேகம்
ரூ.120 கோடி வசூல்: விமர்சனங்களை வீழ்த்தி சாதனை படைத்த விவேகம்
Published on

விவேகம் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் 120 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள விவேகம் படம் கடந்த 24 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியான விவேகம் படத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

உலகம் முழுக்க கிட்டத்தட்ட 3250 திரையரங்குகளில் வெளியான இப்படம், முதல் நாளில் மட்டுமே 40 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்தது. அடுத்தடுத்த நாட்களிலும் ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளில் திரண்டதால் மூன்றே நாட்களில் 120 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும், நான்காவது நாளான நேற்றைய வசூலும் சேர்ந்தால் 150 கோடி ரூபாயை தாண்டியிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி சென்னையில் முதல் நாள் ரூ.1.21 கோடி, இரண்டாம் நாள் 1.51 கோடி, 3 ஆம் நாள் ரூ.1.52 கோடி, 4 ஆம் நாளில் 1.43 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் சென்னையில் பாகுபலி-2 படத்தின் வசூல் சாதனையை விவேகம் முறியடித்துள்ளது. பாகுபலி-2 வார இறுதி வசூலாக ரூ.3.70 கோடியை மட்டுமே ஈட்டி இருந்தது. அந்த வசூலை தற்போது விவேகம் படம் முறியடித்துள்ளது. அதேபோல் சென்னையில் இது வரை தொடர்ந்து நான்கு நாட்களாக ரூ.1 கோடி வசூலை எந்தப்படமும் எட்டியது இல்லை. அந்த சாதனையை விவேகம் படம் முறியடித்துள்ளது. இதன் மூலம், 4 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் எனும் சாதனையையும் விவேகம் பெற்றுள்ளது.

நான்கு நாட்களாக சென்னையில் - ரூ.5.7 கோடி, செங்கல்பட்டு பகுதியில் ரூ.12.8 கோடி, தென் ஆற்காடு ஏரியாவில்  2.5 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வட ஆற்காடு - ரூ.2.6 கோடி. திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் - ரூ.5.5 கோடி, சேலம் - ரூ.5.7 கோடியையும் வசூலித்துள்ளது. மதுரை - ரூ.8.1 கோடி, கோயமுத்தூர் - ரூ.9.2 கோடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி- ரூ.2.7 கோடி என வசூலை எட்டியுள்ளது. அதேபோல், கர்நாடகா - ரூ.9 கோடி, ஆந்திரா, தெலுங்கானா - ரூ.6 கோடி, கேரளா - ரூ.4.5 கோடி, மற்ற மாநிலங்கள் - ரூ.60 லட்சம் ரூபாயை ஈட்டியுள்ளது. வெளிநாடுகளில் 27 கோடி ரூபாயை இதுவரை வசூலித்துள்ளாதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com