"நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயரை சூட்டவில்லை என்றால் பதவியை விட்டுவிடுவேன்!" - ஆர்.கே.செல்வமணி

நடிகர் சங்கம் நன்றி கடன் செலுத்த விரும்பினால் அவருடைய பெயரை சங்கத்திற்கு வைக்க வேண்டும் என்று இயக்குநர் ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.
விஜயகாந்த் - ஆர்.கே. செல்வமணி
விஜயகாந்த் - ஆர்.கே. செல்வமணிweb
Published on

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த்திற்கு நினைவேந்தர் கூட்டம் நடத்தப்பட்டது. தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர்கள் ராதாரவி, நாசர், சரத்குமார், கமல்ஹாசன், ரகுமான், நடிகை ரித்திகா உள்ளிட்ட பல நடிகர்நடிகைகள் பங்கேற்றனர்.

vijayakanth
vijayakanth

மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு அனைவரும் 1 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில், நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைத்து நடிகர் நடிகைகளும் விஜயகாந்திற்கு மேடையில் புகழஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் பெயர் வைக்கவில்லை என்றால் பதவியை விட்டுவிடுவேன்! - ஆர் கே செல்வமணி

புகழஞ்சலில் செலுத்திய இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கூறுகையில், “தென்னிந்திய நடிகர் சங்கத்தை இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு நெய்வேலி போராட்டத்தை நடத்திக் காட்டியவர் விஜய் தான். நடிகர் சங்கம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு காரணமும் விஜயகாந்த் தான். எனவே நடிகர் சங்கத்திற்கு அவரது பெயரை தான் வைக்க வேண்டும். இதற்காக ஆலோசனை நடத்துவோம் என்று கூறினால் எனது பதவியை கூட நான் விட்டுவிடுவேன். இதே மேடையில் கூட முடிவெடுக்க வேண்டும், பொதுக்குழு கூட்டி ஆலோசிக்காமல் அவரது பெயரை சூட்ட முடிவு எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் தனது நன்றி கடனை திருப்பி செலுத்துவதாக இருந்தால், நடிகர் சங்கத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்.

vijayakanth
vijayakanth

பொது சொத்தை எடுத்துக் கொள்ளாத ஒரு தலைவன். காந்தி கூட பொது இடத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால், விஜயகாந்த் பொது சொத்து வேண்டாம் என்று தன்னுடைய இடத்திலேயே அடக்கமாகியுள்ளார். விஜயகாந்த் வாழும் வரை அவரது பலம் தெரியவில்லை அவர் மறைந்த பின்பு தான் தெரிகிறது” என்று எமோசனலாக பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com