போனி கபூர் தயாரிப்பில் நடிகர் ஆர்.ஜே பாலாஜி இந்தி படத்தை ரீமேக் செய்யவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
காமெடி நடிகர் என்று பயணித்த நடிகர் ஆர்.ஜே பாலாஜி கடந்த 2019 எல்.கே.ஜி படத்தை இயக்கி இயக்குநராகவும் உருமாறினார். இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கவே, நயன்தாராவை வைத்து கடந்த ஆண்டு மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்த நிலையில், தற்போது மூன்றாவது படத்தை இயக்கவிருக்கிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அமித் ரவீந்திரநாத் இயக்கத்தில் வெளியான ’பதாய் ஹோ’ படம் இந்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. காமெடி கதைக்கொண்ட இப்படத்தில் ஆயூஷ்மான் குரானா, நீனா குப்தா, சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடித்து பாராட்டுகளை குவித்தனர். இதன் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வாங்கி வைத்திருந்தார்.
ஏற்கனவே, ’நேர்கொண்ட பார்வை’, ’வலிமை’ படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், போனி கபூர் இப்படத்தை தயாரிக்க இப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கவிருப்பதாகவும் இப்படத்திற்கு ‘வீட்ல விஷேசங்க’ தலைப்பு வைத்திருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் தலைப்பில் ஏற்கனவே பாக்யராஜ் படம் இயக்கி இருப்பதால் அவரிடம் அனுமதி பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.