இந்நிலையில், நடிகர் ரிஷி கபூரின் மகள் ரித்திமா கபூர் சாஹ்னிக்கு அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகச் சாலைவழியே பயணிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆகவே வாகனங்கள் சாலையில் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தடையால் ரிஷி கபூரின் இறுதிச் சடங்கில் அவரது மகள் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. ரித்திமா, தொழிலதிபரை மணந்து கொண்டு தனது குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார். ஆகவே விமானம் மூலம் பயணிக்க அவர் மத்திய அமைச்சகத்திடம் அனுமதி கோரியதாகத் தெரிகிறது.