நல்லா தண்ணி குடிங்க: நடிகை ஜனனி அய்யரின் பிட்னெஸ் ரகசியம்

நல்லா தண்ணி குடிங்க: நடிகை ஜனனி அய்யரின் பிட்னெஸ் ரகசியம்
நல்லா தண்ணி குடிங்க:  நடிகை ஜனனி அய்யரின் பிட்னெஸ் ரகசியம்
Published on

சமூக ஊடகங்களில் அடிக்கடி உடற்பயிற்சி வீடியோக்கள், வொர்க் அவுட் படங்களை நடிகை ஜனனி அய்யர் வெளியிடுவதில்லை. ஆனாலும் அவர், தமிழ் சினிமாவின் பிட்டெஸ்ட் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். எளிய உடற்பயிற்சிகளின் மூலம் உடலையும் மனதையும் சிறப்பாக வைத்திருக்கலாம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஆலோசனை சொல்கிறார்.

"சாப்பிடுங்கள், நேரத்தில் தூங்குங்கள், உடற்பயிற்சி. இந்த மூன்றையும் மனதில் வைத்திருக்கிறேன் நான். சிலர் ட்ரெண்ட்டை பின்பற்றுவார்கள். என் ஆலோசனை இதுதான். யாரோ ஒருவர் செய்கிறார் என்பதற்காக எதையும் செய்யாதீர்கள். முதலில் உங்கள் உடலைப் பற்றிப் புரிந்துகொண்டு அதற்கேற்ற உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். அதற்கேற்ப சாப்பிடுங்கள். கடைசியில், சுகாதாரமான லைஃப் ஸ்டைலைப் பெறுவீர்கள்.

நாம் தினமும் வொர்க் அவுட் செய்துவிட்டு, பிறகு செயற்கை உணவைச் சாப்பிட்டால் எதுவும் பயன்தராது. சாப்பிடுவதில் நீங்கள் புத்திசாலியாக செயல்படவேண்டும். சத்தான உணவு என்பது நல்ல சுகாதாரமான வாழ்க்கைக்கு இணையானது. ஜிம் பயிற்சி அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்தாலும் ஒரு பாட்டில் தண்ணீர் குடித்துவிடுவேன். உடற்பயிற்சி செய்து முடித்ததும் பசியை உணர்வீர்கள். அதனால் தண்ணீர் குடித்தால் உங்கள் பசியும் நீரிழப்பும் அடங்கும் " என்று பிட்னெஸ் ரகசியங்களை வெளிப்படுத்துகிறார் நடிகை ஜனனி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com