ஆற்றில் மேல் செல்லும் படகின் மீது கூலாக நடிகை ரெஜினா உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.
தமிழில் ’கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் அறிமுகமானார் ரெஜினா கசாண்ட்ரா. இவர், சிவகார்த்திகேயனின் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, உதயநிதியுடன் ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது, விஷாலுடன் ‘சக்ரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு உலகம் முழுக்க ’கிகி சேலஞ்ச்’ வைரலானபோது ஓடும் காரில் தாவணி பாவாடையில், சாலையில் ஆடிக்கொண்டே ரெஜினா காரில் ஏறும் வீடியோ வைரலாது. அதே சமயத்தில் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டார். இந்நிலையில், தற்போது ஆற்றின் படகு முனையில் கூலாக பயமில்லாமல் உடற்பயிற்சிகளை செய்வதோடு நடனமாடியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
’ஓடும் படகில் ஆழம் நிறைந்த ஆற்றில் பாதுகாப்பாளர்களை வைத்துக்கொண்டு உடற்பயிற்சிகள் செய்வது ரெஜினாவுக்கு வேண்டுமென்றால் பயமில்லாமல் இருக்கலாம். ஆனால், இதனைப் பார்த்துவிட்டு மற்றவர்கள் முயற்சித்தால் உயிருக்கே ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளது என்பதால் இதுபோன்ற வீடியோக்களை பதிவிடுவது சரியானதல்ல’ என்ற விமர்சனங்களையும் நெட்டிசன்கள் முன்வைத்து வருகிறார்கள்.