ரன்பிர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது. அக்குழந்தைக்கு ராஹா என பெயரிட்டுள்ள நிலையில், ரன்பீர் தற்போது மீண்டும் படப்பிடிபுகளில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் அவருடைய சமீபத்திய பேட்டியொன்றில், அசத்தலான பேரண்டிங் டிப்ஸொன்றை ரன்பீர் வழங்கியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறிப்பிட்ட அந்த இண்டர்வியூவின் கேள்வி பதிலில் ‘ஆலியா சிறந்த மனைவியா அல்லது சிறந்த அம்மாவா’ என நிருபர் கேட்க, “இரண்டிலுமே அவர் சிறந்தவர்தான் என்றாலும், சிறந்த அம்மா என்றே நான் சொல்வேன். என் மனைவி ஆலியா, சத்தமாக பேசுவார்... அதிகம் பேசுவார்... துடிப்புடன் இருப்பார் எப்போதும். ஒருவேளை அவரைப்போலவே என் மகளும் இருந்துவிட்டால், ஒரே குணாதிசயங்களைக் கொண்ட இரண்டு பெண்களை வீட்டில் கையாள்வது எனக்கு கடினமான பணியாகவும் இருக்கும். ஆகவே ராஹாவுக்கு என்னை போல அமைதியான குணங்கள் வரட்டும். அப்படியானால் நாங்கள் இருவரும் இணைந்து ஆலியாவை சமாளிப்போம்” என்றுள்ளார் ரன்பீர். இக்கருத்து ஆணாதிக்க மனப்பான்மையிலான கருத்து எனக்கூறி, சிலர் ட்வீட் செய்துவருகின்றார்கள்.
இந்நிலையில் அதே வீடியோவில் தன்னுடைய பேரண்டிங் டிப்ஸ் பற்றி பேசுகையில், “நான் என் குழந்தைக்கு Burping ஸ்பெஷலிஸ்ட்டாக (ஏப்பம் வரவைப்பதில் தேர்ந்தவராக) மாறிவிட்டேன். பெரும்பாலானோருக்கு Burping (குழந்தைக்கு ஏப்பம் வரவைப்பது) என்றால் என்னவென தெரிவதில்லை. புதிதாக குழந்தை பெற்றோருக்கு, குழந்தை பிறந்து முதல் சில மாதங்களுக்கு, இது ரொம்ப ரொம்ப சிரமமாக தெரியும். ஒவ்வொரு முறை குழந்தை சாப்பிட்ட முடித்தபின்பும், பெற்றோர் அவர்களை குறைந்தது 2 தடவையாவது அவர்கள் ஏப்பம்விட செய்யவேண்டும். அதற்கு பெற்றோர் சில டெக்னிக்களை செய்யவேண்டும். அதில்தான் இப்போது நன்கு தேர்ந்துவிட்டேன்” என்றுள்ளார் ரன்பீர்.
மேலும் பேசுகையில், “ஆலியா சாப்பாடு ஊட்டியவுடன், நான் குழந்தையை தூக்கிக்கொண்டு ஏப்பம் விட வைப்பேன். இதுமட்டுமன்றி குழந்தையின் டயாபரை மாற்றிவிடுவதும் இப்போது எனக்கு எளிமையாகிவிட்டது” என்றுள்ளார். இன்றைய இளம் பெற்றோர்கள், கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவற்றில், ரன்பீர் சொல்லும் இந்த Burping Technique ரொம்பவும் முக்கியம். அதை எப்படி நேர்த்தியாக செய்வது என்பதுபற்றிய வீடியோ வடிவிலான யுனிசெஃபின் விளக்கம், இங்கே: