நிச்சயதார்த்தமா ? திருமணமா ? - ராணாவின் காதலி வெளியிட்ட புகைப்படங்கள்

நிச்சயதார்த்தமா ? திருமணமா ? - ராணாவின் காதலி வெளியிட்ட புகைப்படங்கள்
நிச்சயதார்த்தமா ? திருமணமா ? - ராணாவின் காதலி வெளியிட்ட புகைப்படங்கள்
Published on

தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் காதலி மிஹீகா பஜாஜ் தனது இஸ்டாகிராமில் "இட்ஸ் அஃபிஷியல்" என்று குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் மிஹீகா பஜாஜ் பட்டுப்புடவையிலும், ராணா வேட்டி சட்டையிலும் மிளிர்கிறார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நிச்சயதார்த்தமா அல்லது திருமணமே முடிந்துவிட்டதா என்று கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். ‘பாகுபலி’ படத்தில் இடம்பெற்ற பல்லாலதேவா வேடத்தின் மூலம் மிரட்டியவர் நடிகர் ராணா டகுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘காடன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை இயக்குநர் பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இம்மாதம் இத்திரைப்படம் வெளியிடப்பட இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் நாயகன் ராணா டகுபதி அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் சுவாரஸ்யமான புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில் அவர் தனது காதலியை அறிமுகம் செய்து வைத்தார். ராணா அவரது பதிவில், ‘அவள் காதலுக்குச் சம்மதம்’ கூறியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் காதலியின் பெயரை மிஹீகா பஜாஜ் என்று கூறி ஹேஷ்டேக் ஆகப் பயன்படுத்தினார்.

இந்நிலையில் மிஹீகா பஜாஜ் தன்னுடைய இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் "அதிகாரப்பூர்வமாக" எனப் பதிவிட்டுப் பட்டுச் சேலையில் ராணாவுடன் மகிழ்ச்சியோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதற்குத் தமிழ்த் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அனுஷ்கா ஷெட்டி, பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com