’’இதுதான் என் காதல் கதை’’ - ராணா டகுபதி

’’இதுதான் என் காதல் கதை’’ - ராணா டகுபதி
’’இதுதான் என் காதல் கதை’’ - ராணா டகுபதி
Published on

பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மிஹீகா பஜாஜை ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி தனது நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். அவர் சமீபத்தில் நேகா துபியாவின் ‘நோ ஃபில்டர் நேகா’ என்ற ஷோவில் கலந்துகொண்டார்.

அதில் தனது காதல் கதை குறித்தும், மிஹீகாவை திருமணம் செய்தது பற்றியும் கூறியுள்ளார்.

‘’மிஹீகாவை எனக்கு சின்ன வயதிலிருந்தே தெரியும். காரணம், எனது சகோதரியும், அவரும் ஒன்றாகப் பள்ளிக்குச் செல்வார்கள். எனவே அப்போதிருந்தே அவரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்குபிறகு ஹைதராபாத்திலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்துவிட்டனர். பிறகு அவ்வளவாக தொடர்பு இல்லை.

கொரோனா பொதுமுடக்கத்தின்போதுதான் மீண்டும் பேச ஆரம்பித்தோம். அப்போதுதான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இதற்குமேல் தாமதிக்கக்கூடாது என வீட்டில் பேசி, உடனே திருமணமும் செய்துகொண்டோம். நல்ல விஷயங்கள் நடக்கும்போது, அதைப்பற்றி அதிகமான கேள்வி கேட்கக்கூடாது. அனைவருக்கும் சரியான நேரம் வரும். அது எங்களுக்கு வந்துவிட்டது’’ எனக் கூறியுள்ளார்.

திருமண மண்டபத்தில் வைக்காமல், சினிமா ஸ்டூடியோவில் வைத்து திருமணம் செய்தது பற்றி கேட்டபோது, ‘’உண்மையை சொல்லவேண்டுமென்றால், எங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது, எந்த படப்பிடிப்பும் நடக்கவில்லை. மேலும் சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவேண்டும், அதேசமயம் வீட்டிற்கு அருகிலும் இருக்கவேண்டும் என்பதால்தான் ஸ்டூடியோவிலேயே வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். காரணம், எங்கள் வீட்டிலிருந்து ராமநாயுடு ஸ்டூடியோ வெறும் 5 நிமிடம் நடக்கும் தூரத்தில்தான் உள்ளது. அதனால்தான் அந்த இடத்தைத் தேர்வுசெய்தோம்’’ என்று தனது மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் டகுபதி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com